வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி.
நான்காம் பாடத்தின் இரண்டு உரையாடல்களைப் படித்துள்ளோம். நீங்கள் நன்றாக பயிற்சி செய்தீர்களா? கஷ்டமாக இருக்கிறதா?கொஞ்சம் பேச முடியுமா?முயற்சித்துப் பாருங்கள். துணிவு இருந்தால் அதிகமாக பேசுங்கள். படிப்படியாக வாய்க்கு வரும்.
இப்பொழுது கடந்த முறை படித்த உரையாடலை மீண்டும் பார்ப்போம்.
இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற பாடநூலின் 23ஆம் பக்கத்தின் கடைசியிலும் 24ஆம் பக்கத்தின் மேல் பகுதியிலும் உள்ளது.
முதலில் இந்த உரையாடலைக் கேளுங்கள்.
WO WAN DAO YI HUI ER, XING MA?
BU XING!
இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தைத் தருகின்றோம்.
WO WAN DAO YI HUI ER, XING MA?
நான் சற்று தாமதமாக வந்தால், பரவாயில்லையா?
BU XING!
இல்லை, கூடாது.
இந்த உரையாடலில் "WAN"என்றால் தாமதம் என்பது பொருள், "DAO"என்றால் அடைவது என்பது பொருள். "XING MA?"என்றால் எதிர் தரப்பிடம் அனுமதி கேட்பது, முடியுமா என்பது பொருள். இங்கு "MA"என்றால் ஒரு வினா குறியாகும். பொதுவாக வாக்கியத்தின் கடைசியில் வரும். "BU XING" என்றால், இல்லை, முடியாது, கூடாது என்பது பொருள், அனுமதி வழங்காமல் இருக்கும் போது, இப்படி சொல்லலாம்.
இப்பொழுது ஒரு புதிய உரையாடலைப் பார்க்கின்றோம். இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற பாடநூலின் 24ஆம் பக்கத்தின் மேல் பகுதியில் கண்டறியலாம்.
முதலில் இந்த உரையாடலைப் பாருங்கள்.
WO ZUO ZHE ER KE YI MA?
DANG RAN KE YI。
இந்த உரையாடலின் தமிழாக்கம் வருவாறு.
WO ZUO ZHE ER KE YI MA?
நான் இங்கே உட்காரலாமா?
DANG RAN KE YI。
கண்டிப்பாக, உட்காரலாமே.
இந்த உரையாடலிலுள்ள "ZUO" என்றால் உட்காருவது, அல்லது அமருவது என்பது பொருள். "ZHE ER"என்றால் இங்கு அல்லது இங்கே என்பது பொருள். (可以吗)என்றால் "முடியுமா" என்பது பொருள். இந்த சொல், "HAO MA","XING MA"ஆகிய இரண்டு சொற்களுடன், ஒரே பொருள் தான். "முடியுமா" என்பதாகும்.
当然可以 என்ற வாக்கியத்திலுள்ள "DANG RAN" என்றால் கண்டிப்பாக என்பது பொருள். "KE YI"என்றால் முடியும் என்பது பொருள், முடியும் என்று சொல்லுக்கு பின் "ஆ"என்ற எழுத்ததை சேர்த்தால் ஒரு கேள்வியாக அதாவது "முடியுமா"என்பதாக மாறிவிடும். அது போல"KE YI"என்ற சொல்லுக்கு பின் "MA"என்ற சொல்லைச் சேர்த்தால் "KE YI MA"என்ற வினாவாக மாறிவிடும்.
இன்று நாம் மேலும் ஒரு புதிய உரையாடலை படித்துள்ளோம். நன்றாக பயிற்சி செய்து கிரகித்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை சந்திப்போம்.
|