• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-27 21:01:48    
ஷாங்கையில் உலக நிலை குத்துச் சண்டைப் போட்டி

cri

தங்க இடுப்பு பட்டை போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெறுவதற்கான சர்வதேச தொழில்முறை குத்துச் சண்டையின் 8வது சுற்றும் டிசம்பர் 24ஆம் நாள் ஷாங்கையில் துவங்கியது. அன்று நடைபெற்ற மூன்று அதிகாரப்பூர்வ போட்டிகளில் சீனா, தாய்லாந்து, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 6 குத்துச் சண்டை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். சீன வீரர் ச்சியாங் வெய் யாங்கும் வீராங்கனை கௌ லி ச்சின்னும் தத்தனது எதிராளியைத் தோற்கடித்தனர்.

சீன விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் WBA உலக நிலை தொழில்முறை குத்துச் சண்டைப் போட்டி, சீனாவின் ஷாங்கை மாநகரில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். 8 சுற்றுப் போட்டிகள் மூலம் தங்க இடுப்புப் பட்டையை பெறுவதென்ற விதியை WBA என்ற குத்துச் சண்டை அமைப்பு சீனாவின் தொழில்முறை குத்துச் சண்டை இயக்கத்துக்கு தயாரித்தது.

அன்று வெற்றி பெற்றவர்கள், 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் நாள் நடைபெறவுள்ள, ஆண் பெண் தங்க இடுப்புப் பட்டையை பெறுவதற்கானப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெறுவார்கள். அது மட்டுமல்ல, தங்க இடுப்புப் பட்டையைப் பெற்றவர்கள், ஆசிய மற்றும் உலக நிலை குத்துச் சண்டை மன்னர் என்ற பட்டத்துக்காக போட்டியிடலாம்.

58 கிலோகிராம் எடைப் பிரிவின் முதலாவது அதிகாரப்பூர்வப் போட்டி பிலிப்பைன் வீரர் லோ. அல்பாவுக்கும் தாய்லாந்தின் வீரர் தி. அதோஹானாகாவுக்குமிடையில் நடைபெற்றது. அல்பா முதல் சுற்றிலே எதிராளியை மிகவும் இலேசாக தோற்கடித்தார். இரண்டாவது அதிகாரப்பூர்வப் போட்டி, மகளிருக்கான 57 கிலோகிராம் எடைப் பிரிவு போட்டியாகும். சீன வீராங்கனை கௌ லி ச்சுன் 6 சுற்றுகளுக்குப் பின் எதிராளியைத் தோற்கடித்தார்.

முன்றாவது அதிகாரப்பூர்வ போட்டி, ஆடவருக்கான 58 கிலோகிராம் எடைப் பிரிவின் போட்டியாகும். சீன வீரர் ச்சியாங் வெய் யாங் முதல் சுற்றிலே தென் கொரியாவின் பெய் சு மிங்கைத் தோற்கடித்தார். அவர் 2004ஆம் ஆண்டு அனைத்து சீனாவின் இளைஞர் குத்துச் சண்டை சாம்பியன் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருந்தார். இந்த போட்டி சீனத் தேசிய விளையாட்டு தலைமை நிர்வாகம், WBA எனும் உலக குத்துச் சண்டை அமைப்பு ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.