
சிங்தௌ பீர்

பீர் விழா

சிங்தௌ கடற்கரை
சிங்தௌ நகரை 3 பக்கமும் கடல் சூழ்ந்துள்ளது. சிங்தௌ கடற்கரையில் மண் தரமுடையது. இந்நகரில், கடலைத் தவிர, கட்டடமும் கண்டுகளிக்கத் தக்கது. இதற்காகத் தனியாக நேரம் செலவிடத் தேவையில்லை. ஏனெனில், வீதிகளை ஒட்டி தரமான கட்டடங்கள் உள்ளன. சிங்தௌ நகரம், சீனாவில் அதிக அளவில் பீர் உற்பத்தி செய்யும் இடமாகும். இந்நகரில் தயாரிக்கப்பட்ட பீர், உலகப் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் இந்நகரில் பீர் விழா நடைபெறுகிறது. பீர் அருந்த விரும்பும் சிங்தௌ மக்கள், பானமாக அதைக் கருதுகின்றனர். பிளாஸ்டிக் பையில் அதை ஊற்றி, விற்பனை செய்யப்படுவது, இந்நிகரின் தனிச்சிறப்பாகும். சிங்தௌ மக்கள் பொதுவாக பிளாஸ்டிக் பை கொண்டு, 2 அல்லது 3 லிட்டர் பீர் வாங்குவது வழக்கம். குறிப்பாக, கோடைக்காலத்தில், பீர் அருந்தினால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். பீர் மீது மிகுந்த ஆர்வம் கொண்டோர் இங்கு அதிகம்.
|