• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-29 22:39:25    
நீர் குதிப்பு வீரர் மற்றும் வீராங்கனைகளின் போட்டி

cri

2005ஆம் ஆண்டின் முடிவில், புகழ்பெற்ற நீர் குதிப்பு வீராங்கனைகள் கோ ஜிங் ஜிங், வூ மின் சியா, லீ திங் ஆகியோரும் இளம் வீரர்களும் ஷாங்கையில் நடைபெறும் ஒரு அசாதாரண புத்தாண்டு கொண்டாட்டமான 2005ஆம் ஆண்டு சீன சர்வதேச நீர் குதிப்பு பரிசுப் போட்டியிலும் சர்வதேச நீர் குதிப்பு சாம்பியன் சுழல்முறை போட்டியிலும் கலந்துகொள்கிறார்கள். சர்வதேச நீர் குதிப்பு சாம்பியன் சுழல்முறை போட்டியின் ஷாங்கை சுற்று டிசம்பர் 30,31 நாட்களில் நடைபெறும்.

மகளிருக்கான மூன்று மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பு, மகளிருக்கான இரட்டையர் மூன்று மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பு, ஆடவருக்கான பத்து மீட்டர் மேடை ஒற்றையர் மற்றும் இரட்டையர் நீர் குதிப்பு ஆகியவை இந்த சுற்றில் நடைபெறும். சீனாவின் புகழ் பெற்ற வீராங்கனை கோ ஜிங் ஜிங் 2005ஆம் ஆண்டில் எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். உலக சாம்பியன் பட்டப் போட்டி, சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி, கிழக்காசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் அவர் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

ஆனால், 2005ஆம் ஆண்டின் முடிவில் நடைபெறும் இந்தப் போட்டியிலும் அவர் சாம்பியன் பட்டம் பெறுவாரா, வூ மின் சாயா, லீ திங், ஜியா துங் ஜின் உள்ளிட்ட ஆற்றல் மிக்க இளம் வீராங்கனைகள் அவரைத் தாண்டுவார்களா என்பது ஒரு கேள்வி குறியாகும். அவர்களுக்கிடையில் நடைபெறும் போட்டி அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாண்டு தேசிய நீர் குதிப்பு அணி நவம்பர் திங்களில் குளிர்கால பயிற்சி செய்ய துவங்கியது. விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் மிகவும் சிறந்த நிலையில் இருக்கின்றனர். அனுபவமிக்க வீராங்கனை கோ ஜிங் ஜிங்கும் நல்ல நிலையில் நுழைந்துள்ளார். இந்த ஷாங்கை சுற்றுப் போட்டி, நாட்டின் அனைத்து சிறந்த வீராங்கனைகளும் கலந்துகொள்கின்றனர். இது ஒரு உலக நிலை போட்டியாகும் என்று சீனத் தேசிய நீர்குதிப்பு அணியின் தலைவர் சோ ஜி ஹொங் கூறினார்.

ஆனால், ஆடவர்களில் புகழ்பெற்ற வீரர்களான தியன் லியாங், ஹு ச்சியா, யாங் சிங் ஹுய் ஆகியோருக்குப் பதிலாக, சீன தேசிய விளையாட்டுப் போட்டியில் முதல் எட்டு இடங்களை பெற்ற இளம் வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் ஹொ லியாங், லின் யுயே, சோ லி சின் உள்ளிட்ட 16 அல்லது 17 வயதானவர்கள் இடம்பெறுகின்றனர். அவர்கள் இந்த மேடை நீர் குதிப்புப் போட்டியில் போட்டியிடுவர். இந்த போட்டி, இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது.

குளிர்கால பயிற்சியில் அவர்கள் அனைவரும் சில புதிய உயர் நுட்பத்திறனுடைய செயலை பயற்சி செய்தனர். இந்த போட்டியில் அவர்கள் சோதனை முறையில் அந்த செயல்களை காண்பிக்கலாம். புதிய செயல்பாடுகளில் அவர்கள் வெற்றி பெற்றால், இனிமேல் அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் மேலும் போட்டியாற்றலை கொள்வார்கள் என்றும் சோ சி ஹொங் கூறினார்.