• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-28 13:09:29    
புதின் உருவத்தை பச்சை குத்திக் கொள்ளும் ரஷியர்கள்

cri

ரஷிய அதிபர் புதினின் முகத்தை அல்லது அவரது பெயரை தங்கள் உடலில் பச்சை குத்திக் கொள்ள ரஷியர்கள் ஆர்வம் காட்டவருகின்றார்கள்.

சைபீரியாவில் உள்ளவர்கள் நீண்ட வரிசையில் நின்று ப்சசைக்குத்திக் கொள்கின்றார்கள்.

புதினின் முகத் தோற்றத்தை தோளில் பச்சைக்குத்திக் கொண்ட ஜோசப் ராடிமோல், கூறுகையில் புதின் படத்தை பச்சைக்குத்திக் கொள்வது இப்போது பேஷனாகி விட்டது என் நண்பர்கள் எல்லோரும் பச்சை குத்திக்கொண்டு உள்ளனர். என் தோளின் மீது இருக்கும் புதினின் முகத்தை பார்க்கும் போது எல்லாம் எனக்குள் நம்பிக்கை உணர்வு பொங்கிப் பூரிக்கின்றது பாதுப்பாக இருப்பதாக நான் உணர்கின்றேன் என்று கூறினார்.

புதின் ரஷியாவினஅ ஜனரஞ்சகமான தலைவராக மாறிவிட்டார் என்பதையே இது காட்டுகின்றது என அந்த நாட்டுப்பத்திரிகை ஒன்று கூறி உள்ளது.

வண்டுகளின் தொல்லையால் கிராமமே காலி

ரஷியாவில் உள்ள போல்வோய் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலத்துக்கு உரமாக பயன்படுத்துவதற்காக வெளி நாட்டில் இருந்து கோழி கழிவுகளை இ

றக்குமதி செய்து தனது வீட்டின் அருகே குவத்து வைத்து இருந்தார். மழை பெய்ததால் சில நாட்களில் அந்த கழிவில் இருந்து லட்சக்கணக்கான வண்டுகளும் பூச்சிகளும் உறுவாயின. அந்த வண்டுகள் ஊர் முழுக்க பறக்கை ஆரம்பித்தன. இதனால் யாரும் வீட்டில் இருக்க முடியவில்லை. வண்டுகளின் தொல்லை தாங்க முடியாமல் அந்த கிராமத்தின் உள்ளவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பக்கத்து ஊருக்கு சென்றுவிட்டனர்.

பூனையின் திருவிளையாடல்

இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்ிதல், ஒரு காட்டுப் பூனை, ரயில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்துள்ளது. என்ன காரணம்?

சேத்தர், ரிச்சுகட்டா எனும் இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையிலான மின்சாரக் கம்பி மீது, அந்தப் பூனை ஓடியது. இரை தேடி அது ஓடியது. ஆனால், அதன் மீது மின்சார பாய்ந்துவிட்டது. மின் கம்பியும் அறுந்து கீழே விழுந்து, சரக்கு ரயில் வண்டியின் என்ஜினைப் பழுதடையச் செய்தது.

இதன் விளைவாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

கொலையுண்ட பூனை

இலண்டன்வாசியான ஹால்லி தேக்கர் எனும் பெண்மணிக்கு வயது 34. 15 வயதில், 5 வயதில், 2 மள் அவருக்கு உண்டு. அண்மையில், 6 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். ஏன் தெரியுமா? வீட்டில் செல்லமாக வளர்ந்து வந்த பிஃளப்பி எனும் பூனையை, சலவை இயந்திரத்தில் போட்டு கொலை செய்ததே, இதற்கு காரணம்.

தனது 2 மகள்களின் கண் முன்னால் இந்த க் கொலையை அவர் செய்திருக்கின்றார்.

அவரது முன்னாள் கணவன், அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டார்.

நான் கொடுமை இழைக்கவில்லை. அந்தப் பூனை என்னைப் பிறாண்டியது. ஆகவை, நான் அதைச் சலவை இயந்திரத்தில் போட்டு, 90 டிகிரி செல்சிஸ் வெப்ப நிலையில் சாகடித்தேன் என்று வாதாடினார் அந்தப் பெண்மணி.