• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-19 11:42:06    
எழில் மிக்க நான்சாவ் தீவு

cri

சீனாவின் யுன்னான் மாநிலத்தில் நான்சாவ் தீவு அமைந்துள்ளது. அழகின் மறு உருவமான Erhai தீவில் அமைந்து, மேலும் அழகுடன் அது விளங்குகிறது. பயணிகளை ஈர்க்கும் காட்சித் தலங்களில் நான்சாவ் தீவும் ஒன்றாகும். இதற்கு என்ன காரணம்? பழங்கால அரண்மனைகள் வெண்மணற் பரப்புடன் கூடிய கடற்கரை, ஆலமரங்கள், வியத்தகு பண்பாடு இவை அனைத்தும் காரணம் என்றால் மிகையாகாது. கி.பி. 618 முதல் 907 நபை நிலவிய தாங் வமிச ஆட்சிக் காலத்தில் இணையான ஆற்றல் மிக்க இராணுவ பேரரசாக அது விளங்கியது. பெய்ச்சிங்கில் உள்ள தடுக்கப்பட்ட நகரத்துக்கு இணையாக நான்சாவ் அரண்மனை நகரம் விளங்கியதாகத் தெரிகிறது. கம்பீரமான கோடைக்கால அரண்மனைகள் எழில் மிகு தோட்டங்கள் என பலவற்றின் இருப்பிடமாக அது இருந்தது. நான்சாவ் மக்களிடையே திபெத்திய மற்றும் ஹான் பண்பாட்டின் தாக்கம் தென்பட்டாலும் பாய் எனும் பூர்வீக பண்பாடு தான் மேலோங்கிக் காணப்படுகிறது. உள்ளூர் மக்கள் காவல் தெய்வங்களை வாங்குகின்றனர்.

இது பொதுவாகக் காணப்படும் பழக்காமாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஜயனாரை வழிபடுவதுடன் இதை ஒப்பிட்டுக் கருதலாம். பாய் இனத்தின் பல்வேறு பிரிவினர்க்கு என தன்த்தனிக் காவல் தெய்வம் உண்டு. இவ்வெண்ணிக்கை, மொத்தம் 500 இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சூரிய நாள் நாட்டியின் படி, 4வது திங்களின் 23 முதல் 25 ஆவது நாள் வரை, இந்தக் காவல் தெய்வங்களை வாங்கும் வகையில், பலிப்பூசை நடைபெறுகின்றது. விழா எடுக்கப்படுகிறது. நான்சாவ் தீவின் முக்கியமான கட்டுரையில் தாய் ஷாயி என்றழைக்கப்படும் பெண்மணியின் உருவச்சிலை அமைந்துள்ளது. பழங்காலத்தில் வழங்கப்பட்ட கதையின் படி மீனைப் பெண்ணான ஷாயி, நான்சாவ் தீவைச் சேர்ந்த முன்னோரில் ஒருத்தியாவாள். ஒரு நாள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மந்திர மரக்கட்டை ஒன்றினை அவள் தொட்டுவிட்டாள். உடனே கர்ப்பமாகிவிட்டாள். பின்னர், பத்து ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இந்தப் பத்துப் பேருக்கும், வீடு கட்டுவது, பாறையை நகர்த்துவது, விறகை வைத்து அடுப்பு எரிப்பது என்று ஆளுக்கொரு திறமையைச் சொல்லிக் கொடுத்தாள்.

இதன் பின்னர், அந்தக் கிராமத்தில் இருந்த இன்னொரு பெண்மணி பத்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இந்தப் பத்து பேரும் ஷாயிலின் பத்து மகன்களுக்கு மனைவியராயினர். அவள் தொட்டது மரக்கட்டை அல்ல. டிராகன் என்பதை அவள் பின்னர் உணர்ந்து கொண்டாள். நான்சாவ் தீவில் உள்ள fuxing சதுக்கம்-அதாவது அதிர்ஷ்ட நட்சத்திரம்-பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்தச் சதுக்கத்தில் அமைந்துள்ள பளிங்குச்சிலை 17.56 மீட்டர் உயரமானது. 400 டன் எடை கொண்டது. 277 பளிங்குக் கல் துண்டுகளால் ஆனது. குயான்யின் எனும் ஆண் மகனின் சிலை தான் அது. அவன் ஆணாக இருந்தாலும் வித்தியாசமான இரக்க குணம் கொண்டிருந்தான். அதனால் அவனது வெளித்தோற்றம், மக்கள் மனதில் மாறுபட்டுப் பதிந்தது. அவனைப் பெண்ணாக அவர்கள் கருதலாயினர். ஆணாக இருந்து, பெண்ணாக மாறிய நிலையை இந்தச் சிலை புலப்படுத்துகிறது. தாலி நகரப் பண்பாட்டில் அவனைப் பற்றிய பல கதைகள் வழங்குகின்றன. அவனது 33 அவதாரங்கள், 3 முக்கிய நாட்கள் அதாவது அவனுடைய பிறந்த நாள் வீட்டை விட்டு வெளியேறி துறவியான நாள், நிர் வாணம் அடைந்த நாள் ஆகிய 3 நாட்கள் என்பன 3, 6, 9 எனும் எண்களுடன் தொடர்புடையவை. இதனால் Fuxing சதுக்கத்திற்குச் செல்வதற்கு, 39 படிக்கட்டுகள் காணப்படுகிறன. சதுக்கத்தின் விட்டமும் 39 மீட்டராகும். சதர வடிவத்திலான அந்த சதுக்கம், புத்த கோட்பாட்டின் சின்னமாக விளங்குகிறது. சிறிய தீவான நான்சாவில் கண்ணுக்கு விருந்து படைக்கும் காட்சி தலங்கள் பலவாக அமைந்துள்ளன.

அவற்றில் தைய்ஹு பூங்கா குறிப்பிடத் தக்கது. மிங் மற்றும் சிங் வமிச ஆட்சிக்காலத்தில் பாராட்டுப் பத்திரம் போல தைய்ஹு பாறைகள் பேரரசர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. அரிய தொங்கற் பாறைகள் பலவற்றைக் கொண்டுள்ள இந்தப் பாறை பூங்காவை, கட்டிட வல்லுநர்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர். கடற்கரைப் பொழுதுபோக்கு பூங்காவின் ஒரு பகுதியான LEXUE மாடத்தில் இருந்த வம்ணம் Erhai ஏரியின் கவின் மிக காட்சியைக் கண்டுகளிக்கலாம். நான்சாவ் தீவில் 500 ஆண்டுகளாகத் தழைத்துவரும் ஆலமரம் ஒன்று உண்டு. 600 மீட்டர் அளவுக்கு அது பரந்து விளங்குகிறது. அதனுடைய வேர்கள் அருவி போல் காட்சி தருகின்றன. நான்சாவு தீவுக்கு அருகில் உள்ள மீன்பிடி கிராமங்களைத் தவறாது காண முடியும். இரவு பொழுதில் படகில் அமர்ந்த வண்ணம், மீனவர்களின் வீடுகளில் எரியும் விளங்குகளின் ஒளி, நீரில் பிரதிபலிப்பதைக் காண்பது என்பது மாறுபட்ட அனுபவமாகும். நான்சாவ் தீவுக்கு வருகை தருவோர் அங்குள்ள கோடைகால அரண்மனையில் தங்கலாம். பழங்சீனப் பண்பாட்டின் மணத்தை நுகரலாம். நேயர்களே வாருங்கள், நான்சாவ் தீவைக் கண்டு களியுங்கள்.