
மலையோரத்தில் வாழும் வறட்சி தை, என்பது, தை இனத்தின் மற்றொரு பிரிவாகும். நீர் தை இனத்தின் ஆடைகளை விட, இவ்வினத்தின் ஆடை, மேலும் வண்ணமயமானது. வறட்சி தை இனத்தில் Hua Yao Zu எனும் பிரிவினர், மிகவும் அழகான ஆடை அணிகின்றனர். கறுப்பு சிவப்பு என இரண்டு நிறங்களில் ஆடை நெய்யப்படுகின்றது. குட்டையான மேல் சட்டையில் கழுத்தப்பட்டையும் சட்டைக்கையும் கிடையாது. பூத்தையல் வேலைப்பாடும் அலங்காரமும் அவ்வாடையில் நிறைய காணப்படுகின்றன. வெள்ளியாலான கைவளை, காதணி, கழுத்து அணி முதலியவற்றை இவ்வின மங்கையர் மிகவும் விரும்பி அணிகின்றனர்.
வளர்ந்த பின், இம்மங்கையர், முதுகில் அருமையான சிறிய மூங்கில் கூடையை மாட்டிக்கொள்வர். மிகவும் அழகாக ஆடை அணிந்து, தம் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தியின் வழிகாட்டலில், வீதிகளில் மெதுவாக நடப்பர். வீதிகளின் ஒரு பக்கங்களிலும், பார்வையை வீசிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், தம் பிரியத்துக்குரிய மங்கையரின் கூடையில் அன்பளிப்புப்பொருளை வீசி ஏறிவர். அவள், அந்த இளைஞரைக் காதலிப்பதாக இருந்தால், இப்பொருளை ஏற்றுக்கொள்வாள், இல்லாவிடில், திருப்பித் தந்து விருவாள். எழிலான ஆடை அணியும் இப்பெண்மணிகள் அனைவரும், பார்ப்பதற்கு மிகவும் அழகானவர்கள்; நடந்து செல்லும் போது, அவர்களின் இடுப்பிலுள்ள மணியிலிருந்து இனிய ஒலி கேட்கின்றது. இதற்கிடையில், அழகுமிக்க மங்கையரையும் மிகவும் அழகான ஆடைகளையும் காணலாம். இவ்வாய்ப்பில், தை இன மங்கையளும் இளைஞரும் பலர் மணமாவர் என்பது, இயல்பை.
முன்பு, பயண இயலாளர் ஒருவர், தை இன மங்கையரின் ஆடை பாவாடையைக் கண்டார். இவ்வாடைகள், உடலில் அணியும் கவிதைகளைப் போலவே அழகானவை. பெண் என்றால், இயல்பாக, இத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்று பின்னர், அவர் கூறினார். அழகான தை இன மங்கையரை நேரில் காண விரும்பினால், ஏப்ரல் திங்களில் யுன்னான் மாநிலம் சென்று, அங்குள்ள ஆனந்தமான நீர் தெளிப்பு விழாவில் கலந்து கொள்ளுங்கள், இவ்விழா, தை இன மங்கையரைப் பொறுத்த வரை, மிகவும் மாபெரும் ஆடை கண்காட்சியாகும். இம்மங்கையர், இனிமையான சிலிப்புடன் அழகான ஆடையணிந்து தங்களை வரவேற்பர்.
|