ஆசிரியர்ப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பஹர்குரி, வட மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தில் 25 ஆண்டுகள் பாடம் சொல்லிக்கொடுத்தார். பணியிலிருந்து விலகிய பின் மற்ற பெரும்பாலான மக்களைப் போல், தமது குடும்பப் பணியில் மூழ்கிவிடவில்லை. சுற்றுலா செல்லவில்லை. மாறாக, தாமாகவே நிதியைத் திரட்டி, தொழில்முறை தொழில் நுட்ப பள்ளி ஒன்றை நடத்துகின்றார். இன்றைய நிகழ்ச்சியில், பஹர்குரி பள்ளி நடத்துவது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
மூன்றாண்டுகளுக்கு முன், 55 வயதில் பஹர்குரி, பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதாகியது. பல்லாண்டுகால ஆசிரியர் வாழ்வில், சிங்கியாங்கில் தொழில்முறை கல்வியும் தொழில் நுட்ப பயிற்சியும் பலவீனமானது என்றும், தொழில் நுட்பமில்லை என்பதினால், பலர், பணியை பற்றிக்கொள்ளவில்லை என்றும் அவர் கண்டறிந்தார். மீண்டும் மீண்டும் சிந்தித்து, பல்வகைகளிலும் நிதியை திரட்டி சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உருமுச்சியில் தொழில்முறை தொழில் நுட்பப் பள்ளி ஒன்றை நடத்தத் துவக்கினார். இன்னல்நிலையில் வாழ்கின்ற, ஆனால், தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வமுடைய சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் வேலை பெறுவதற்கு அவர் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கின்றார்.
பள்ளி துவங்கியதும், வேலையற்றோர் பலரைச் சேர்த்தார். இம்மாணவர்களில் பலரின் குடும்பங்களுக்கு பணக்குறைவு. வாழ்க்கை இன்லைமிக்கது. அவர்களின் சுமையைக் குறைக்க, பஹர்குரி அவர்களின் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்தார். பனிதன் தனது வாழ்நாளில் சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்றார். அவர் கூறியதாவது:
"இவ்வுலகில் மனிதர், எதையும் செய்யாமல் வாழ்வது சரியில்லை. சுவையான உணவை உண்டு. அழகான அடைகளை உடுத்தி, மகிழ்ச்சியுடன் விளையாடி நடத்தும் வாழ்க்கை என்ன முக்கியத்துவம்? ஒருவர் வாழும் நாட்களில், சமூகத்துக்கு ஏதாவது முக்கியத்துவம் உடைய காரியங்களை செய்திட வேண்டும். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தொழிற்கூடங்களில் பணிபுரிவதைக் கண்டு மிகவும் மிகழ்ச்சியடைகின்றேன். உடம்பில் களைப்பு ஏற்பட்டாலும், வாழ்க்கையில் இன்னல் ஏற்பட்டாலும் இது பரவாயில்லை" என்றார், பஹர்குரி.
சயிர்சியாங் என்பவர், இப்பள்ளியில் படித்தார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான அவர், தொழில் நுட்பப் பயிற்சி பெறுவதற்கு முன் வேலையில்லாமல் திண்டாடினார். நான்கு பேர் அடங்கிய இக்குடும்பம், உள்ளூர் அரசின் நிதியுடவியுடன் வாழ்ந்தது. திங்களுக்கு 150 யுவான் உதவித் தொகையைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது எவ்வளவு இன்னல் என்று நினைத்துப் பார்க்கலாம். இந்நிலையை மாற்றும் நம்பிக்கையுடன், அவர், பஹர்குரியின் பள்ளிக்கு வந்து, வீட்டுப் பயன்பாட்டு மின் கருவிகளைச் செப்பனிடும் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தார். பணத்தை சிக்கனமாக்க, அவர் அடிக்கடி பசித்த வயிற்றுடன் படித்து வந்தார்.
|