இவ்வாண்டு சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில் கையாளும் சரக்கு அளவு 44.3 கோடி டனை எட்டியுள்ளது. சிங்கப்பூர் துறைமுகத்தில் கையாளும் சரக்கு அளவை தாண்டுவது இதுவே முதன்முறையாகும். ஷாங்காய் துறைமுகம், உலகில் முதலாவது பெரிய துறைமுகமாக மாறியுள்ளது. ஷாங்காங் மாநகர துறைமுக நிர்வாக ஆணையம் இன்று வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டு ஷாங்காய் துறைமுகத்தில் கொள்கலன்கள் கையாளும் சரக்கு அளவு அதிகரித்து வருகின்றது. இன்று வரை, இவ்வாண்டில் ஒரு கோடியே 80 லட்சத்து 90 ஆயிரம் கொள்கலன்கள் சரக்குகளைக் கையாண்டன. இது, உலகில் மூன்றாவது இடம் வகிக்கின்றது. ஷாங்காய் துறைமுகத்தின் ஆழ்கடல் நெறி, ஐரோப்பிய, அமெரிக்க கண்டத்தில் உள்ள துறைமுகங்களுக்கு செல்லும். அண்மைக்கடல் நெறி, ஷாங்காய் துறைமுகத்திலிருந்து ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய துறைமுகங்களுக்கு செல்லும் என்று தெரிகிறது.
|