• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-02 20:41:51    
பெய்சிங் ஒலிம்பிக் ஆயத்தப் பணி

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான நுழைவு சீட்டு 2007ஆம் ஆண்டின் முற்பாதியில் விற்கப்படும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் கமிட்டியின் துணை செயல் தலைவர் லியூ ச்சிங் மின் டிசம்பர் 22ஆம் நாள் பெய்சிங் மாநகர நிர்வாக வானொலிக்கு பேட்டியளித்த போது, இந்த தகவலை தெரிவித்தார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானம் தற்போது சீராக நடைபெற்று வருகின்றது. கட்டப்படவுள்ள 31 அரங்கங்களிலும் 5 தொடர்புடைய திட்டப்பணிகளிலும் 18 கட்டுமானப் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. இந்த அரங்கங்களின் பாதுகாப்பும் தரமும் மிகவும் உறுதியானவை. அனைத்து புதிய விளையாட்டு அரங்கங்களும் 2007ஆம் ஆண்டின் இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.

மேசைப் பந்து மூன்றாவது டொயாட்டோ கோப்பை சர்வதேச மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டி டிசம்பர் 25ஆம் நாள் ஜப்பானின் நகோயா நகரின் AICHI-KEN விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 2005ஆம் ஆண்டின் கடைசி சர்வதேச மேசைப் பந்துப் போட்டி இதுவாகும். உக்கிரமான போட்டிக்குப் பிறகு, சீன வீராங்கனை சாங் யீ நிங் எல்லா செட்களிலும் வெற்றி என்ற சாதனையுடன் மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார். தென் கொரிய வீரர் லியூ ச்சங் மின் ஆடவர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார்.

தேகொங்டோ 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன தேகொங்டோ அணி புதிய சாதனை படைக்க, பாடுபடும். மகளிர் குழு, இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற முயற்சிக்கும். ஆடவர் குழு, ஒரு பதக்கத்துக்காக பாடுபடும் என்று சீன அரசின் தலைமை விளையாட்டு நிர்வாகத்தின் தேகொங்டோ விளையாட்டுக்கான பொறுப்பாளர் செங் யூ டிசம்பர் 21ஆம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார். தேகொங்டோ, சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. கடந்த இரண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீன மகளிர் குழு மொத்தம் 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றது.