• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-06 08:25:19    
சீன மகளிர் கால்பந்து அணியின் பயிற்சி

cri

புதிதாக உருவாக்கப்பட்ட சீன மகளிர் கால்பந்து அணி டிசம்பர் 20ஆம் நாள் குவாங்சோ நகரில் ஒரு திங்கள் கால பயிற்சியைத் துவக்கியது. ஜனவரி 18ஆம் நாள் முதல் 22ஆம் நாள் வரை குவாங்சோவில் நடைபெறவுள்ள 4 நாடுகளின் மகளிர் கால்பந்து அழைப்புப் போட்டிக்கு ஆயத்தம் செய்வது இந்த பயிற்சியின் நோக்கமாகும். அப்போது, சீன அணி, அமெரிக்கா, நார்வே மற்றும் பிரேஞ்சு அணிகளுடன் இப்போட்டியில் கலந்துகொள்ளும்.

பிரேசிலின் தேசிய கால்பந்து அணியின் RONALDINHOAL டிசம்பர் 19ஆம் நாள் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 2005ஆம் ஆண்டு உலக கால்பந்து மாஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக கால்பந்து மாஸ்டர் பல்வேறு நாடுகள் மற்றும் வட்டார அணிகளின் முக்கிய பயிற்சியாளர்களாலும் அணித் தலைவர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

2005ஆம் ஆண்டில், RONALDINHOAL தனது சிறந்த விளையாட்டுத் திறனுடன், 2004-2005 போட்டி பருவ ஸ்பானிஷ் பிரிமியர் லீக் "SPANISH PRIMERA LIGA" போட்டியில் பார்சலோனா கிளப் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு உதவி புரிந்தார். அத்துடன் 2005ஆம் ஆண்டு FIFA CONFEDERATIONS கோப்பைக்கான போட்டியில் சாம்பியன் பெற்றதில் ஸ்பெயின் அணிக்கு பங்களித்தார். அவரது சிறந்த செயல்பாட்டினால், இந்த தேர்தலில் பெரும்பாலான வாக்குகளை அவர் பெற்றார்.

நீர் குதிப்பு 2005ஆம் ஆண்டின் கடைசி சர்வதேச நீர் குதிப்புச் சுழல் முறைப் போட்டியின் ஷாங்கை சுற்று டிசம்பர் 30, 31 நாட்களில் நடைபெறும். சீனா மற்றும் ரஷியாவின் புகழ்பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளும் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள்.

வாலிபால் 2009ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான ஆடவர் வாலிபால் சாம்பியன் பட்டப் போட்டியை இத்தாலி நடத்தப் போகிறது, போட்டி நடைபெறும் நகரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சர்வதேச வாலிபால் சம்மேளனம் டிசம்பர் 22ஆம் நாள் இதை அறிவித்தது. இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில் இத்தாலியின் தலைநகரான ரோம் நகரும் செர்பிய தலைநகரான பெல்கிரேடும் ஐரோப்பிய ஆடவர் வாலிபர் சாம்பியன் போட்டியை கூட்டாக நடத்தின.