• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-04 16:24:52    
குகை வீடு

cri
Cave-house, குகை வீடு, வடமேற்கு சீனாவின் பீடபூமியில் மிகவும் பழைய குடியிருப்பு வடிவமாகும். அங்குள்ள மக்கள் வசிப்பிடமாகப் பயன்படுத்திய குகை வீடுகளுக்கு ஆயிரம் ஆண்டு வரலாறு உண்டு. இத்தகைய வீடுகளில் வசிப்பது மிகவும் சிறப்பிற்குரியது. இன்றைய சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் இந்த பலவீனமான கட்டிட வடிவம் பற்றியும் இதில் வாழும் மக்கள் பற்றியும் கூறுகின்றோம்.அறிவிப்பாளர், ஷான் சி மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏன் ஆன் நகரின் Hua Yuan Tun கிராமத்தில் சுமார் நூறு விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் குகை வீடுகளில் வசிக்கின்றன. 53 வயதான சாங் சி யுன் ஒரு சாதாரண விவசாயி. அவருக்கு 2 மகன்களும் ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உண்டு. அவருடைய குடும்பம் தலைமுறை தலைமுறையாக குகை வீடுகளில் வசிக்கின்றன என்று சாங் சி யுன் கூறினார். குகை வீடு நல்லது. குளிர் காலத்தில் வெப்பமாக இருக்கும். கோடைகாலத்தில் இளங்குளிராக இருக்கும். என் குடும்பம் பல தலைமுறைகளாக இங்கே வாழ்கின்றது. எனது பேரனும் இந்த குகை வீட்டில் தான் பிறந்தான். இந்தக் குகை வீட்டை மிகவும் விரும்புகின்றேன் என்றார் அவர். 4000 ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு ஷாங்சி மாநிலத்தின் ஹுவங் து பீடபூமியில் மக்கள் குகையை குடைந்து, வாழ்வது வழக்கமாக இருந்தது. ஏனென்றால், பீடபூமியின் மஞ்சள் மண்ணுக்கு சதுப்புத் தன்மை அதிகம். மிகவும் கடினமானது. எனவே குடையப்பட்ட குகை எளிதில் இடந்து விழாது. மலைகளில், குகைகளைக் குடைவதும் எளிதானது. செலவு குறைவு. இது மட்டுமல்ல, குகைகளின் உள்ளே குளிர் காலத்தில் வெப்பமாகவும் கோடைகாலத்தில் இளங்குளிராகவும் இருப்பதால், இத்தகைய குகை வீடுகள் பல இன்னும் ஹுவாங் து பீடபூமியில் இருக்கின்றன. சுமார் 4 கோடி மக்கள் இவற்றில் வாழ்கின்றனர். குகை வீடுகளின் உயரம் சுமார் 3 மீட்டர். அகலம் 3 மீட்டர். சுமார் 20 மீட்டர் வரை ஆழமாக உள்ளது. குகைகளின் வாசல் தெற்கு நோக்குகின்றது. மண்ணைக் குடைந்து அமைக்கப்பட்ட குகை வீடு ஒரு வடிவம். மற்றொன்று, மண்ணைக் குடைந்த பிறகு, கல் அல்லது செங்கல்களைப் பயன்படுத்தி குகைகளை உறுதிப்படுத்துவதுண்டு. இத்தகைய குகை வீடுகள் மேலும் அழகானவை. சாங் சி சுனின் வீடு மொத்தம் 8 குகைகளைக் கொண்டது மலைச் சரிவில் மொத்தம் 3 மாடிகள். மேல் மாடியில் உள்ள 2 குகைகள், சாங் சி சுனின் தந்தையால் 1962ஆம் ஆண்டு குடையப்பட்டன. இதுவரை, சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளன. 2வது மாடியில் உள்ள 3 குகைகள் 1964ஆம் ஆண்டு கட்டப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் செங்கற்களால் மேம்படுத்தப்பட்டன. தற்போது, சாங் சி சுன் தம்பதியும் இளைய மகனின் குடும்பமும் இங்கே வசிக்கின்றனர். மலை அடியில் உள்ள 3 கல் குகைகள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. அவருடைய மூத்த மகன் குடும்பம் இவற்றில் வாழ்கின்றது.
சாங் சி சுனின் குகை வீடு சுமார் 20 சதுர மீட்டருடையது. இதில் மிகவும் சூரிய வெளிச்சம் அதிகம். உள்ளே, படுக்கை அடுப்புடன் சேர்க்கப்பட்டது. படுக்கையின் அருகில் உள்ள 3 பக்க சுவர்களில் அழகான கத்தரிப்பும், ஓவியங்களும் பசையால் ஓட்டப்பட்டுள்ளன. இவை ஒரு வகை அலங்காரமாகும் என்று ஷான் சி மாநிலத்தின் ஏன் ஆன் மக்கள் கலை அரங்கின் ஆய்வாளர் வாங் கே வென் கூறினார்.