• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-04 16:37:45    
நிகழ்ச்சியின் மேம்பாடு

cri
நேயரின் பெருமையில் நாங்களும் பங்கு கொள்கிறோம் தொழில் நட்ப வளர்ச்சி நம்மை நெருக்கமடையச் செய்யட்டும் புதுச் சேரி மாநிலம் கானரக்கால் நகரில் இருந்து ஆர் ராஜேஷ் என்கிற பரந்தராமன் எழுதிய கடிதம் சீன மொழியின் சிறப்பை எடுத்துக் கூறும் படைப்புக்களை மொழியாக்கம் செய்து தமிழ்மொழியில் சீன வானொலி வெளியிட வேண்டும் என்று கோருகிறார். சீன வானொலி ஒலிபரப்புக்காக மட்டுமே உள்ளது. நூல்களை வெளியிட முடியாது. ஆனால் சீன நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழ் நாட்டில் விற்பனையாகின்றன. எங்கள் முந்தைய நிபுணர் முனைவர் கடிகாச்சலம் பல சீன நூல்களை தமிழாக்கி வெளியிட்டுள்ளார். நீங்கள் வாங்கிப் படிக்கலாம் சத்திய மங்கலம் மாவட்டம் கோட்டு, வீராம் பாளையம் எம் சுந்தரவடிவேலு, ஜனவரி திங்களில் எழுதிய கடிதம் இப்போது கைக்கு கிடைத்துள்ளது. மன்னிக்கவும் சுந்தரவடிவேலு உங்கள் கடிதம் எப்படியோ வரிசை தவறிவிட்டது. நீங்கள் தொடர்ந்து கடிதம் எழுத வேண்டுகிறோம். விஜயலட்சுமி, நீங்கள் குளிரில் வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். சேலம் செவ்வாய் பேட்டை நேயர் கே பாலாஜி எதற்காக உங்களுக்கு கணிபிடித்தால் வருங்கால இசை அரசியின் குரல் கெட்டு விடும் என்று பயப்படுகிறார். புரியவில்லையா, நீங்கள் பாடிய சீனப்பாட்டுக்கு இவ்வாறு பாராட்டுத் தெரிவிக்கிறார். அப்படியா, பாராட்டுக்கு நன்றி. நவம்பர் திங்கள் நிகழ்ச்சிகளை பாராட்டி கடிதம் எழுதியுள்ள புதுச்சேரி பெரிய காலாப்பட்டு நேயர் பி சந்திரசேகரன் பைத்தியக்காரனின் டைரி சீனக்கதை கனவில் நடக்கும் கதை போல் உள்ளது என்கிறார். கடவுள் தந்த கரண்டி நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டு, உணவுக்காக குச்சியைப் பயன்படுத்துவது தவறல்ல. ஆனால் பல்லாயிரக் கணக்கான மரங்களை அழிப்பது தவறு என்று கூறிவிட்டு எவ்வளவு தான் உணவு சாப்பிட பல முறைகள் வந்தாலும், நமது கைபோல வருமா என்கிறார். அக்டோபர் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி கருத்து எழுதியுள்ளார். திருவானைக் காவல் ஜி சக்கரபாணி. இவர் அறிவியல் உலகம் நிகழ்ச்சிய்ல் இடம் பெற்ற சீனாவல் செயற்கை மழை பற்றிய தகவல்களைப் பாராட்டியுள்ளார். நீலகில மாவட்டம் கீழ் குந்தா நேயர் கே கே போஜன், அக்டோபர் திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி கருத்துக் கூறுகிறார். சீன உணவு அரங்கத்தில் கூறப்பட்ட காய்கறி பாய் என்னும் சைவ உணவு, தமிழ் நாட்டில் மீக்கடைகளில் விற்சப்படும் பப்ஸ் போல இருக்கும் எனத் தெரிகிறது என்கிறார். ஒரு பைத்தியக் காரரின் டைரி போன்ற கலிதகளை இனி ஒலிபரப்ப வேண்டாம் என்கிறார். அப்படியா, எதனால் போஜன் மனிதமாமிசம் தின்பது பற்றிக் கூறக் கேட்கவே அருவருப்பாக இருக்கிறது. மேலும் ராஜேந்திர குமாரின் மர்மக்கதை படிப்பது போல பயங்கரமாக இருக்கிறது என்கிறார். மலர்ச் சோலை நிகழ்ச்சியில் கழிப்பறையை சுத்தம் செய்த இனவரசர் என்ற செய்திதொடர்பாக, மகாதிமா காந்தியடிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகிறார் போஜன். காந்தியடிகள் தமது ஆகிரமத்தில் அரிஜனர் ஒருவரைச் சேர்த்துக் கொண்டு, அவர் பயன்படுத்திய கழிப்பறையை தாமும் தமது மனைவி கஸ்சாளிபாவும் சேர்ந்து சுத்தம் செய்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.