1997ம் ஆண்டில், திபெத் ஆடல்பாடல் குழு சில திபெத் ஆடல் பயிற்சியாளர்களை வளர்க்க வேண்டியது. பல ஆண்டுகளில் ஆடல் நடிகையாக வேலை செய்த புஃப்புசோமா, சில தேர்வுகளை எதிர்நோக்கினார். கடைசியாக, பயிற்சியாளராக வேலை செய்வதை அவர் தேர்ந்தெடுத்தார். அவர் மேலும் கூறியதாவது:
நான் ஒரு பொறுப்புணர்ச்சியுடையவர். பல இளம் நடிகர்களுக்கு மேலும் நல்ல திபெத் இன ஆடல் படைப்புகளை வழங்குவதற்குப் பொறுப்பேற்கின்றேன் என்றார் அவள்.
1997ம் ஆண்டில், அவர் மூன்றாவது முறையாக பெய்ஜிங் ஆடல் கல்லூரிக்கு வந்து, ஆடல் பயிற்சியாளர் பாடத்தைக் கற்றுக்கொண்டார். பெய்ஜிங் குழந்தைகளின் ஓய்வு நேர வாழ்வு பல வடிவமாக இருப்பதை அவர் பார்த்தார். ஓய்வு நேரத்தில் குழந்தைகள் சிறப்பு ஆடல் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். ஆனால் திபெதில் இத்தகைய பயிற்சி ஆசிரியர் இல்லை. இதனால், படிப்பின் ஓய்வு நேரத்தில், புஃப்புசோமா ஆடல் தகுதி தேர்வுக்கான ஆசிரியர் பாடத்தைக் கற்றுக்கொண்டு, ஆடல் தேர்வு ஆசிரியர் தகுதி சான்றிதழைப் பெற்றுள்ளார். 2001ம் ஆண்டில், அவர், திபெத்தின் முதலாவது குழந்தை ஓய்வு நேர ஆடல் பள்ளியைத் திறந்தார். குழந்தைக்களுக்குப் பொருத்தமான திபெத் இன ஆடலின் தனித்தன்மை வாய்ந்த குழந்தை ஆடல் பாடத்தை அவர் இயற்றினார். இதனால், சாதாரண திபெத் இன குழந்தைகள் சிறப்பு ஆடல் கல்வியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் ஆடல் பயிற்சியாளர் பணி குறிப்பிடுகையில், திபெத் இன பொது மக்களின் வாழ்க்கையில் நுழைந்து, பாரம்பரிய ஆடல் பல்வேறு இடங்களில் எவ்வாறு உருவானது, பரவியது, வளர்ந்தது ஆகியவற்றைப் பார்ப்பது, திபெத் இன ஆடலின் பயிற்சிப் பணியில் ஈடுபடுவதற்குத் தேவைப்படுகிறது என்று அவர் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
பாரம்பரிய திபெத் இன ஆடல்கலை குறித்து, முழுமையாக பாதுகாக்க வேண்டும். ஆனால், அரங்கில் ஆடப்படும் ஆடல், முந்திய விதிகளைப் பின்பற்றி இருப்பதோடு மட்டுமல்ல, வளர்ச்சியடையவும் வேண்டும். வளர்ச்சி இல்லாமல் போனால், பாரம்பரியம் அழிந்து விடும். இது, நான் இப்போது அடிக்கடி சிந்திக்கும் பிரச்சினையாகும் என்றார் அவர்.
|