அடுத்த ஐந்து ஆண்டுகளில், சீனாவின் மிக பெரிய ஆறான யாங் சி ஆற்றில் நீர் போக்குவரத்து வளர்ச்சிக்காக, சீன போக்குவரத்து அமைச்சகம் 1500 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும். சீன போக்குவரத்து அமைச்சின் நீர் போக்குவரத்து பிரிவுத் துணை தலைவர் Cao De Sheng பேசுகையில், அடுத்த 5 ஆண்டுகளில், யாங் சி ஆற்றில் உள்ள முக்கிய துறைமுகங்கள் வளர்க்கப்படும். இதற்காக, யாங் சி ஆற்றின் நீர் போக்குவரத்து வழித்தடம், துறைமுகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றார். தவிர, யாங் சி ஆற்றின் நீர் போக்குவரத்து வசதிகளை உருவாக்கி, சமூக நிதியை பயன்படுத்துவதற்கும் போக்குவரத்து அமைச்சகம் ஊக்கமளிக்கின்றது. உலகில் மிக சுறுசுறுப்பான, நீர்வழிப்போக்குவரத்துப் பாதையாக யாங் சி ஆறு மாறியுள்ளது.
|