• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-06 14:16:28    
Xibo இனம்

cri

வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆற்றோரத்தில் மீன்பிடித்து வீடு கட்டி, அயராது உழைப்பதை பண்டைக்கால Xibo இனத்தின் ஒரு நாட்டுப்புறப்பாடல் வர்ணிக்கின்றது. Qi Che Shan என்பவர் இவ்வினத்தின் அறிஞர் ஆவார். இப்பாடலைப் பாடுகின்றார். அவரது முன்னோடிகள், வடக்கிழக்கு சீனாவில் வாழ்ந்திருந்தனர். சொகுசான மீன்பிடிப்பில் வாழ்க்கை நடத்தினர். இருப்பினும், தற்போது, அவரது குடும்பம் வட மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்றது. அவர்களுடன் வசிக்கும் Xibo இனத்தவரின் எண்ணிக்கை, சுமார் 40 ஆயிரமாகும்.

இவ்வளவு அதிகமான Xibo இன மக்கள் சிங்கியாங்கில் வாழ்கின்றனர். காரணம் என்ன? இதோ ஒரு உண்மைக் கதை.

240 ஆண்டுகளுக்கு முன்னர், சிங் வம்சகாலத்தில், எல்லைக் காவலை வலுப்படுத்துவதற்காக, அரசு, வட கிழக்கிலிருந்து மூவாயிரத்துக்கும் அதிகமான Xibo இன படையினரையும் மக்களையும் வடமேற்கு சிங்கியாங்கில் குடியமர்த்தியது. 17 திங்கள்கால கடின பயணத்துக்குப் பின், அவர்கள் சிங்கியாங்கிற்கு வந்து இ லி ஆற்றின் தெற்கு கரையில் குடியேறினர்.

நீர் பற்றாக்குறையினால், அவர்கள் 6 ஆண்டுகளில் 200 கிலோமீட்டருக்கு அதிகமான நீளமுடைய பெரிய கால்வாய் ஒன்றை தோண்டி, இ லி ஆற்று நீரைக் கொண்டு, தரிசு நிலத்தை வயலாக்கப் பயன்படுத்தினர். பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் இப்பெரிய கால்வாய்க்கு, "Chabuchaer" அதாவது, Xibo இன மொழியில் தானியக் களஞ்சியம் என்ற பெயர் வழங்கப்பட்டது. இதற்குப் பின் அயரா உழைத்து வரும் Xibo இன மக்கள், இ லி ஆற்றோரத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து புதிய ஊரகத்தை நிர்மாணித்து வருகின்றனர்.

அப்போதைய சீனாவின் எல்லைப் பாதுகாப்பு நிர்மாணத்துக்கு அவர்கள் அருஞ்செயல் ஆற்றியுள்ளனர். இவ்வரலாற்றை, சிங்கியாங்கிலுள்ள Xibo இனத்தவர் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்காகப் பெருமைப்படுகின்றனர்.