கடந்த ஆண்டின் ஆகஸ்ட் திங்கள் 7ஆம் நாள் அதிகாலை, சீனாவுக்கு இன்னொரு நல்ல செய்தி கிடைத்தது. போலாந்தின் வார்சா நகரில் நடைபெற்ற உலக MODERN PENTATHLON சாம்பியன் பட்டப் போட்டியின் ஆடவருக்கான தனியார் நிகழ்ச்சியில் சீன வீரர் ச்சியன் சென் ஹுவா சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதலாவது ஆசியர் அவர் ஆவார். கடந்த ஜூலை திங்கள் 23ஆம் நாள் நடைபெற்ற உலக விளையாட்டுப் போட்டிகளின் 6 பேர் உடல் கட்டழகு குழுப் போட்டியில் சீன அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவும், சீன அணி இந்த துறையில் பெற்ற முதலாவது தங்கப் பதக்கமாகும்.

ஆகஸ்ட் திங்களில் சீன வீராங்கனை யாங் சுய் லிங் சீனாவின் முதலாவது பௌலிங் உலக சாம்பியனாக மாறினார். செப்டம்பர் 17ஆம் நாள் சீன ஆடவர் TRAMPOLINE அணி, உலக சாம்பியன் பட்டப் போட்டியின் ஆடவர் குழு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. இதனால், இந்த விளையாட்டில் சீனாவுக்கு உலக சாம்பியன் பட்டம் இல்லாத வரலாறு முடிவடைந்தது. நவம்பர் 27ஆம் நாள் உடல் கட்டழகு துறையில் ச்சியன் ச்சி செங் என்பவர் சீனாவுக்கு முதலாவது உலக சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தார்.
கடந்த ஆண்டின் மே திங்களில் சீன தடகள விளையாட்டு வீரர் லியூ சியாங், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் உலக விளையாட்டுத் துறையில் உச்ச பரிசான LAUREUS பரிசு பெற்றார். அவர், NBA இல் சேவை புரியும் யோ மிங்கை அடுத்து, இந்த பரிசை பெற்ற இரண்டாவது சீன வீரராக விளங்குகின்றார்.
இருப்பினும், 2005ஆம் ஆண்டில் சீன மக்களை வியப்படைய செய்த சீன விளையாட்டு வீரர் திங் சுன் ஹுய் தான், 18வயதான அவர் குறுகிய 8 திங்கள் காலத்தில் உலக விளையாட்டு அரங்கத்தின் வியப்புக்குரிய சாதனையை பெற்றார். ஏப்ரல் திங்களில் சீன ஒப்பன் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் பெற்றார். டிசம்பர் திங்களில் நடைபெற்ற பிரிட்டிஷ் சாம்பியன் பட்டப் போட்டியில் அவர் மேலும் சாதனை நிகழ்த்தினார். அவர் தொடர்ச்சியாக 9 உகல புகழ்பெற்ற ஸ்நோகர் வீரர்களைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.
2005ஆம் ஆண்டு சீன விளையாட்டு வீரர்கள் பெற்ற சாதனைகள் உலக கவனத்தை ஈர்த்தது. 2006ஆம் ஆண்டில் அவர்கள் மேலும் பெரும் சாதனை பெற நாங்கள் அனைவரும் வாழ்த்துக்கின்றோம், எதிர்பார்க்கின்றோம்.
|