வணக்கம் நேயர்கள்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி.
இன்று நாம் புதிய பாடத்தை படிக்காமல் ஏற்கனவே படித்துள்ள மூன்று உரையாடல்களை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.
முதலில் முதலாவது உரையாடலை பார்ப்போம்.
WO CHU QU YI HUI ER, HAO MA?
HAO!
இந்த உரையாடலின் பொருள் வருமாறு--
நான் சற்று வெளியே போக வேண்டும், பரவாயில்லையா?
சரி, பரவாயில்லை.
இப்பொழுது விளக்கம் சொல்லுகின்றோம், WO CHU QU YI HUI ER, HAO MA?என்ற வாக்கியத்திலுள்ள "WO"என்றால் நான் என்பது பொருள். "出去"என்றால் வெளியோ போவது என்பது பொருள். "YI HUI ER"என்றால் சற்று நேரம் என்பது பொருள். 好吗?என்றால், முடியுமா என்பது பொருள். 好என்றால் சரி என்பது பொருள்.
அடுத்து இரண்டாம் உரையாடலை பார்ப்போம்.
WO WAN DAO YI HUI ER, XING MA?
BU XING!
இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தைத் தருகின்றோம்.
WO WAN DAO YI HUI ER, XING MA?
நான் சற்று தாமதமாக வந்தால், பரவாயில்லையா?
BU XING!
இல்லை, கூடாது.
இந்த உரையாடலில் "WAN"என்றால் தாமதம் என்பது பொருள், "DAO"என்றால் அடைவது என்பது பொருள். "XING MA?"என்றால் எதிர் தரப்பிடம் அனுமதி கேட்பது, முடியுமா என்பது பொருள். இங்கு "MA"என்றால் ஒரு வினா குறியாகும். பொதுவாக வாக்கியத்தின் கடைசியில் வரும். "BU XING" என்றால், இல்லை, முடியாது, கூடாது என்பது பொருள், அனுமதி வழங்காமல் இருக்கும் போது, இப்படி சொல்லலாம்.
இனி, மூன்றாம் பாடத்தைப் பார்ப்போம்.
WO ZUO ZHE ER KE YI MA?
DANG RAN KE YI。
இந்த உரையாடலின் தமிழாக்கம் வருவாறு--
WO ZUO ZHE ER KE YI MA?
நான் இங்கே உட்காரலாமா?
DANG RAN KE YI。
கண்டிப்பாக, உட்காரலாமே.
இந்த உரையாடலிலுள்ள (ZUO) என்றால் உட்காருவது, அல்லது அமருவது என்பது பொருள். (ZHE ER)என்றால் இங்கு அல்லது இங்கே என்பது பொருள். (KE YI MA)என்றால் "முடியுமா" என்பது பொருள். இந்த சொல், (HAO MA),(XING MA)ஆகிய இரண்டு சொற்களுடன், ஒரே பொருள் தான். "முடியுமா" என்பதாகும்.
DANG RAN KE YI என்ற வாக்கியத்திலுள்ள "DANG RAN" என்றால் கண்டிப்பாக என்பது பொருள். "KE YI"என்றால் முடியும் என்பது பொருள், முடியும் என்று சொல்லுக்கு பின் "ஆ"என்ற எழுத்ததை சேர்த்தால் ஒரு கேள்வியாக அதாவது "முடியுமா"என்பதாக மாறிவிடும். அது போல"KE YI"என்ற சொல்லுக்கு பின் "MA"என்ற சொல்லைச் சேர்த்தால் "KE YI MA"என்ற வினாவாக மாறிவிடும்.
இன்று மூன்று உரையாடல்களை நாம் மீண்டும் ஒரு முறை பார்த்துள்ளோம். எல்லாவற்றையும் புரிந்துகொண்டீர்கள் என்று நம்புகின்றோம்.
|