• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-11 12:49:04    
ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு 8

cri

"அவங்க என்னையும் தின்ன விரும்பறாங்க. நீ தனி ஆளா ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா நீ ஏன் அவங்களோட சேரணும்? மனித மாமிசம் தின்பவர்கள் எது வேண்டுமானாலும் செய்வாங்க. அவங்க என்னைத் தின்ற பிறகு உன்னையும் தின்னலாம். அந்தக் கூட்டத்துல இருக்கிறவங்க ஒருவரை ஒருவர் தின்று விடலாம். நீ உடனே உன்போக்கை மாத்திக் கிட்டா எல்லோரும் நிம்மதியா வாழலாம். இந்தக் கொடுமை காலம் காலமாக நடந்துக்கிட்டு வருது. ஆனாலும் இன்னைக்கி நாம நல்லவனா மாறுவோம். இது நடக்கக்க கூடாதுன்னு தடுத்து நிறுத்துவோம். அண்ணே, உன்னால முடியும். நீ தைரியமா சொல்ல முடியும். அன்னைக்கி குத்தகைக்காரன் குத்தகைப் பணத்தைக் குறைக்கச்சொன்னப்போ நீ முடியாதுன்னு தைரியமா சொல்லலியா."

முதலில் அவன் அலட்சியமாகப் புன்னகைத்தான். அப்புறம் அவனுடைய கண்களில் ஒரு கொலை வெறி மின்னியது. அவர்களுடைய ரகசியத்தைப் பற்றி நான் சொன்னதும் அவனுடைய முகம் வெளிறிப் போனது. வாசலுக்கு வெளியே ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது. ச்சாவோவும் அவருடைய நாயும் கூட அதில் இருந்தனர். எல்லோரும் என்னையே எட்டி எட்டிப் பார்த்தனர். எல்லோருடைய முகங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. துணியால் முகத்தை மூடியிருந்தார்கள். சிலருடைய முகங்களோ சிரிப்பை மறைத்தபடி பயங்கரமாக, பேய் அறைந்தது போல காணப்பட்டன. இவர்கள் எல்லாமே ஒரு கும்பல் என்பதை நானறிவேன். எல்லோருமே மனிதமாமிசம் தின்பவர்கள். ஆனால் எல்லோருமே ஒரேமாதிரி நினைக்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லை. காலங்காலமாக இருந்து வருவதால் மனிதனைத் தின்னலாம் என்று சிலர் நினைத்தார்கள். வேறு சிலரோ மனிதனைத் தின்னக் கூடாது என்று தெரிந்திருந்தும் தின்ன விரும்பினார்கள். ஆனால் தங்கள் ரகசியத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்வார்களோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. ஆகவே நான் பேசியதைக் கேட்டதும் அவர்கள் கோபப்பட்டனர். ஆனாலும் புன்சிரிப்பு சிரித்தனர். வாய் பிரியாமல் ஒருவித இறுக்கமான எரிச்சல் கலந்த புன்னகை.

திடீரென எனது அண்ணன் கோபப்பட்டு உரத்த குரலில் கத்தத் தொடங்கினான்.

"போங்க எல்லாரும் ஒரு பைத்தியத்துகிட்ட என்னத்தை பார்ப்பீங்க?"

அப்போதுதான் அவர்களுடைய தந்திரம் எனக்குப் புரிந்தது. அவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். நன்றாகத் திட்டம் போட்டே வந்திருக்கிறார்கள். எனக்கு ஒரு பைத்தியம் என்று முத்திரை குத்திவிட்டார்கள். என்னைத் தின்னும் போது அவர்களுக்கு பிரச்சினை வராது. யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். மாறாக மக்கள் நன்றி பாராட்டுவார்கள். கிராம மக்கள் ரௌடியை அடித்துக் கொன்று தின்றதாக குத்தகைக்காரன் சொன்னானே. அதே தந்திரம்தான் இது.

முதியவர் சென் முன்னால் வந்தார். மிகவும் ஆவேசத்தோடு வந்தார். ஆனாலும் என் வாயை மூட மூடியவல்லை. நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

"நீங்க மாறணும் உங்களுடைய அடிமனசுல மாற்றம் வரணும். எதிர் காலத்துல இந்த உலகத்துல மனித மாமிசம் தின்பவர்களுக்கு இடமில்லை என்பதை நீங்க புரிந்து கொள்ளணும்."