• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-10 17:44:22    
சர்க்கரை வளி கிழங்கு

cri
இப்போது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம். இன்று ராஜாராமும் தி. கலையரசியும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் சேர்ந்து சமையலறை விவகாரம் பற்றி விவாதிக்கின்றோம்.

ராஜா.....சமையல் விவகாரம் பெரியவிவகாரம் ஆச்சே. கலையரசி இன்றைக்கு என்ன சிற்றுண்டி பற்றி நண்பர்களுக்கு சொல்லுவீங்க. ரகசியம் எதுவும் இல்லையே.

கலை......இதில் ரகசியம் ஒன்றும்

இல்லை. கடந்த ஆண்டில் கலைமகள் சிற்றுண்டி பச்சை காய் போன்ற சீன உணவு வறுவல்களை சொல்லியாச்சி. புத்தாண்டு காலத்தில் வீட்டுக்கு வந்த விருந்தினர்களை வரவேற்கும் வகையில் பொதுவாக சிற்றுண்டி தர வேண்டாமா.

ராஜா.....ஆமாம் இன்றைக்கு சிற்றுண்டி தருவீங்களா?

கலை......அதற்கு கேந்ட்டீன் போகலாம். முதலில் சீன மக்கள் மிகவும் அறிந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை கொண்டு சமைக்கும் சிற்றுண்டி பற்றி சொல்லலாமா.

 

ராஜா......சொல்லுங்கள். நீங்கள் சொல்வதற்கு முன் நான் என்று சொல்லலாமா.

கலை......சொல்லுங்கள்.

ராஜா.....பெய்சிங்கில் தங்கியிருந்த அனுபவத்தை பார்த்தால் சர்க்கரை வள்ளிக் கிழங்கு பல தாரங்கள் அதிகம் என்று தெரிகிறது. வண்டிகளில் கணப்பு அடுப்பு போட்டு ச.கிழங்கை சுட்டு விற்கிறார்கள்.

கலை........ஆமாம். இன்றைக்கு அறிமுகப்படுத்துகின்ற சிற்றுண்டி பின் பெயர் சர்க்கரை வள்ளிக்க் கிழங்கு வடையாகும்.

ராஜா.........இந்த வடை சுடுவதற்கு தேவையான முக்கிய பொருட்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஒரு கிலோகிராம் போதுமா?

கலை.....போதும். இது தவிர வேறு துணைப் பொருட்களும் தயாராக இருக்க வேண்டும். இதில் 200 கிராம் ரப்பர் அரிசி மாவு தட்டில் வைக்க வேண்டும். பின், 100 கிராம் சர்க்கரை இன்னொரு தட்டில் வைக்க வேண்டும்.

ராஜா......சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஏற்கனவே இனிப்பானது. மேலும் கூடுதலான சர்க்கரை போட ணுமா?

கலை.......கட்டாயம் போடத் தேவை இல்லை. வடையின் சுவைக்காக நீங்கள் சர்க்கரை சேர்க்கலாம். இல்லைனா, வெறும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வடையை தின்னலாம்.

ரைஜா.....சரி, வடை எப்படி தட்டுவது? விபரமாக சொல்லுங்கள்.

கலை......சொல்கின்றேன். சுத்தம் செய்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை ஆவியில் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சில நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். பிறகு கரண்டிகொண்டு மகித்துக் கொள்ள வேண்டும்.

ராஜா......வடைமாவு போல வந்ததும் ரப்பர் அரிசி மாவையும் சீனியையும் சேர்க்கணுமா?

கலை.......ஆமாம். அரிசிமாவு சேர்ப்பதால் வடை மொறுமொறு என்று இருக்கும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு மாவு, ரப்பர் அரிசி மாவு, சீனி ஆகியவற்றை நன்றாக சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீரையும் விட்டு நன்றாகப் பிசைய வேண்டும்.

ராஜா......எதற்காக தண்ணீர்?

கலை........அப்போது தாண் மாவு இளக்கமாக இருக்கும். உள்ளஹ்கையில் மாவை எடுத்து சிறுசிறு வடையாகத் தட்டி வாணயில் காய்ந்த எண்ணெயில் போட்டு பொரிக்கணும்.

ராஜா......எனக்கு புரிந்தது. இந்த வடைகள் பொந்னிறமாகும் வரை எண்ணெயில் வேக வேண்டும்.

கலை.....சரிதான் பொந்னிறமான பின் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வடை தயாராகிவிட்டது. தின்பதற்கு மொறுமொறு என்று சுவையாக இருக்கும். சத்துவும் அதிகமானது. உடம்புக்கு நன்மை தருவது.

ராஜா......சரி. நண்பர்களே இன்றைய உணவு அரங்கத்தில் கற்றுக் கொண்ட சர்க்கரை வள்ளிக்க் கிழங்கு வடையை சுட்டுத் தின்னுங்கள். உங்கள் வாழ்க்கையை இனிப்பாக்குங்கள்.

கலை.....சரி, இனிப்புடன் இன்றைய உணவு அரங்கம் நிகழ்ச்சியை நிறைவு செய்வோம்.

ராஜா.....அடுத்த முறை பாலுடன் கூடிய பப்பாளி சிற்றுண்டி பற்றி கூறுவோம். வேண்டிய பொருட்கள் பப்பாளி, முட்டை, தேன் போதும். வணக்கம் நேயர்களே.