 சீனாவில், காதல் கடிதங்களை வழங்கும் கம்ப்யூட்டர் மென்பொருளை தயாரித்துள்ளனர். "மேஜிக் லவ் லெட்டர்ஸ்"என்ற இந்த மென்பொருளில் 10 ஆயிரம் வகையான காதல் கடிதங்கள் இடம்பெற்றுள்ளன. காதல் கடிதங்களை அனுப்புபவரின் பெயர், பெற்றுக்கொள்பவரின் பெயரைக் கூறினால் அதற்கு தகுந்த காதல் கடிதங்களைக் கொடுக்கும். இந்த கம்ப்யூட்டர் மென்பொருள் இதுவரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாங்கி இருக்கிறார்களாம்.
ஒருநாள் இரவில் திடீர் என மறைந்த ஏரி
ரஷியாவில் போலோட் நிகோலோ கிராமத்திலுள்ள ஏரி திடீர் என ஒரு நாள் இரவில் காணாமல் போய் விட்டது. காலையில் ஏரியில் மீன் பிடிப்பதற்காக வந்த மீனவர்கள் ஏரியைக் காணாமல் திகைத்துப் போய் விட்டனர். ஏரி இருந்த இடத்தில் சேறும் சகதியும் மட்டுமே இருந்தன.
ஏரிக்கு அடியில் ஏற்பட்ட துவாரம் வழியாக ஏரித்தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்டு இருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

"பிணம்"குத்துவிட்டது:டாக்டர் அதிர்ச்சி
ருமேனியா நாட்டில் பிராசோவ் நகரிலுள்ள ஆஸ்பத்திரி பிண அறைக்கு 16 வயது வாலிபரின் "உடல்"வந்தது. அந்த உடலை அறுத்து பரிசோதனை செய்வதற்காக டாக்டர் ஏற்பாடு செய்தார். அப்போது அந்த "பிணம்", டாக்டரின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டது. பின்னர்தான் அந்த வாலிபர் மயங்கி கிடந்தார் என்றும் இறந்துவிட்டதாக தவறாக கருதி பிண அறைக்கு கொண்டு வந்தனர் என்பதும் தெரிய வந்தது.
பணம் வாங்க மறுத்த பிச்சைக்காரர்
ஜெர்மன் நாட்டு அரசியல்வாதி பீட்டர் கிளாய்ஸ்டீன். இவர் பிரமன் நகரில் ஒயின் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். அப்போது 45 வயதான உடோ ஒட்டமன் என்ற பிச்சைக்காரரின் தலையில் மதுவை ஊற்றினார். இதை எதிர்த்த ஒட்டமன், நீ யார்? ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டபோது அரசியல்வாதியின் பாதுகாவலர்கள் அந்த பிச்சைக்காரரை அடித்து விரட்டினர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் அந்த அரசியல்வாதிக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் பிறகு நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட அரசியல்வாதி, அந்தப் பிச்சைக்காரருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். ஒரு இரவு ஓட்டலில் தங்க வசதி செய்து கொடுத்தார். ஒரு பேனாவும் பரிசளித்தார்.
இதை எல்லாம் அந்தப் பிச்சைக்காரர் எனக்கு உன் பணமும் பொருளும் தேவை இல்லை. என்னை கேலிப்பொருளாக்கி, நீ உன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ளப் பார்க்கிறாய் என்று கோபமாகப் பேசினார்.
இந்தச் சம்பவம் அரசியல்வாதியின் பதவியைப் பறித்துவிட்டது. அவர் பிரமன் நகரசபையின் துணைத்தலைவராக இருந்தார்.
|