
பெருஞ்சுவர்
இவ்வாண்டின் ஜுன் திங்களின் இரண்டாவது சனிக்கிழமை, சீனாவின் பண்பாட்டு மரபுச்செல்வ நாளாகக் கொண்டாடப்படும். தற்போது, சீனாவில் பண்பாட்டு மரவுச்செல்வங்களைப் பாதுகாக்கும் பணி, நம்பிக்கையூட்டுவதாக இல்லை. பண்பாட்டு மரபுச்செல்வ நாள் மூலம், பொது மக்களிடையே பண்பாட்டு மரபுச்செல்வங்களை பாதுகாக்கும் உணர்வை வலுப்படுத்த வேண்டும் என்று சீன அரசு விரும்புகின்றது என்று சீன தேசிய தொல்பொருள் துறையின் அதிகாரி கூறுகிறார். பண்பாட்டு மரபுச்செல்வத்தை பாதுகாக்கும் இலக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 2010ம் ஆண்டில் பண்பாட்டு மரபுச்செல்வ பாதுகாப்பு நிலை, குறிப்பிடத்தக்க அளவு மேம்பட வேண்டும். 2015ம் ஆண்டில், பண்பாட்டு மரபுச்செல்வத்தைப் பாதுகாக்கும் முழுமையான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். வரலாறு, பண்பாடு மற்றும் அறிவியல் மதிப்புள்ள பண்பாட்டு மரபுச்செல்வங்கள் பயனுள்ள முறையில் பேணிப்பராமரிக்கப்பட வேண்டும். பண்பாட்டு மரபுச்செல்வ பாதுகாப்பில் சீனச் சமூகம் தானாக முன்வந்து ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
|