• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-12 13:00:25    
 மன்னிப்பு வழங்குவது என்ன பொருள்

cri

கலை.....குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது என்ன வகை தீர்ப்பளிப்பு?இது பற்றி எனக்கும் நேயர்களுக்கும் விளக்கி கூறலாமா?

ராஜா.....குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது என்றால் நாட்டின் அதிபர்கள் அல்லது அரசின் மிக உயரிய அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட அளவில் உள்ள குற்றவாளிகளின் குற்றச் செயல்களை மன்னித்து அவர்களை விடுதலை செய்யும் முறையாகும்.

கலை....அப்படியானால் சட்ட ரீதியில் என்ன பயன் உண்டு?

ராஜா.....அதன் பயன் பெரிதானது. குற்றவாளிகளுக்கு தண்டனையை செயல்படுத்தாமல் இருக்க முடியும். அது மட்டுமல்ல குற்றம் இழைப்பதும் ஒழிக்கப்படலாம்.

கலை......மன்னிப்பு கேட்ட குற்றவாளிகள் ஏற்க வேண்டிய குற்றப் பொறுப்பு அனைத்தும் அதனுடன் நீக்கப்பட்டதா? அவர்கள் மீது இனிமேல் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாமா? அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்படுமா?

ராஜா.....குற்றவாளிகள் மீது இனிமேல் வழக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை. வழக்கு தாக்கல் செய்யப்பட்ட குற்றவாளிகள் மீகு இதனால் தண்டனை விதிக்கத் தேவையில்லை. சிறை தண்டனை காலம் முடிக்கப்பட்டுவிடும் தண்டனை பயனற்றுப் போகும்.

கலை.......நீங்கள் விளக்கிய பின் எனக்கு புரிந்தது. பண்டைகாலத்தில் நிலபிரப்புத்துவ ஆட்சியாளர்கள் மன்னர் பதவி ஏற்கும் போது அல்லது ஆட்சிபுரியும் ஆண்டு பெயரை மாற்றும் போது அல்லது அரசியையும் இளவரசரையும் நியமிக்கும் போது குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது வழக்கம் உண்டு என்ற வரலாறு என் ஞாபகத்திற்கு வந்தது.

ராஜா......பண்டைகால சீன ஆட்சியாளர்கள் செயல்பட்டதை ஒப்பிட்டு பார்த்தால் இன்றைய பல்வேறு நாடுகளின் அதிபர்கள் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது நாட்டின் குற்ற வியல் சட்டம் தொடர்பான கொள்கையின் படி நிறைவேற்றப்படுகின்றது. பொது மன்னிப்பு மூலம் விடுதலை பெற்றோர் மிக பரந்தளவில் உள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட குற்றம் இழைத்தவர்கள் மன்னிப்பு கேட்க முடியும். சிறப்பு அளவில் குறிப்பானவர்கள் என்ற கட்டுப்பாடு இல்லை. மன்னிப்பு வழங்குவதன் பயனும் மிக பெரியதானது. தண்டனை நீக்கப்பட்டு குற்றப் பதிவும் அழிக்கப்படுகின்றது.

கலை....... பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது அரசு நிலை நடவடிக்கையாக இருக்க வேண்டும். அப்படிதானே.

ராஜா......ஆமாம். ஆகவே அரசு அதிபர் அல்லது அரசின் அதியுயர் அதிகார நிறுவனத்தால் கட்டளை வெளியிடப்பட்டு பொது மன்னிப்பு வழங்குவது அறிவிக்கப்படும்.. சட்ட நீதி மன்றத்திற்கு இது பற்றி தீர்மானிக்கும் உரிமை இல்லை.

கலை..... பொது மன்னிப்பு வழங்குவதற்கும் குறிப்பான மன்னிப்பு வழங்குவதற்குமிடையில் வித்தியாசம் என்ன?

ராஜா........ பொது மன்னிப்பு வழங்குவதென்று கூறினால், குற்றம், தண்டனை ஆகிய இரண்டுமே நீக்கப்படுகின்றது என்று பொது குறிக்கின்றது. குறிப்பான மன்னிப்பு வழங்குவது என்றால் தண்டனை செயல்படுத்துவதை நீக்கலாம். ஆனால் குற்றவாளி மீது தொடுக்கப்பட்ட வழக்கை நீக்க முடியாது. பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் குற்றவாளிகள் இழைத்த குற்றம் சட்டத்தில் அழிக்கப்படும். குறிப்பான மன்னிப்பு வழங்குவதில் தண்டனையை மட்டுமே நீக்க முடியும். குற்றச் சாட்டை அழிக்க முடியாது. பொது மன்னிப்பு வழங்கும் அரசாணையில் மன்னிப்பு வழங்கப்படும் குற்றத்தின் வகைகளும் அளவும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அவற்றுக்குள் உட்பட்ட குற்றவாளிகள் மட்டுமே மன்னிப்பு கேட்க முடியும். யார் யாருக்கு மன்னிப்பு என்று தெளிவாக குறிப்பிடத் தேவையில்லை. குறிப்பான மன்னிப்பு உத்தரவில் குறிப்பிட்ட கைதிகளின் பட்டியல் தெளிவாக இடம் பெற வேண்டும். நான் விளக்கி சொன்னது தெளிவாக புரிகிறதா?

கலை.......தெளிவாகப் புரிகிறது. நான் மீண்டும் சொல்லட்டுமா?பொது மன்னிப்பு வழங்கும் போது குற்றம், தண்டனை ஆகிய இரண்டும் நீக்கப்படப்படுகின்றன. குறிப்பான மன்னிப்பு வழங்குவதில் குறிப்பிட்ட ஆட்களின் தண்டனை மட்டுமே நீக்கப்படுகின்றது. அப்படிதானே.

ராஜா.......சரிதான்.

கலை......சீனா 1954ம் ஆண்டில் தொகுத்த அரசியல் சட்டத்தில் பொது மன்னிப்பு வழங்குவதும் குறிப்பிட்ட மன்னிப்பு வழங்குவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தேசிய மக்கள் பேரவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பான மன்னிப்பு வழங்கும் அதிகாரம் சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு மற்றும் குறிப்பான மன்னிப்பு ஆணைகள் அரசுத் தலைவரால் மட்டுமே வெளியிடப்படும்.

ராஜா......1975, 1978ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்திலும் தற்போதைய அரசியல் சட்டத்திலும் குறிப்பான மன்னிப்பு மட்டுமே வகுக்கப்படுகின்றது என்பதை நான் அறிந்தேன்.

கலை........ இந்த அரசியல் கட்டமைப்பை பார்த்தால் சீனாவில் பொது மன்னிப்பு வழங்கும் அமைப்பு முறை நீக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்திலுள்ள அரசியல் சட்டத்தின் 67வது 80வது விதிகளின் படி, குறிப்பான மன்னிப்புக்கான ஆணை சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி தீர்மானிக்கின்றது. சீன அரசுத் தலைவர் தான் இந்த குறிப்பான மன்னிப்பு ஆணையை வெளியிடுவார்.

ராஜா.......இன்றைய நிகழ்ச்சியை கேட்ட பின் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது பற்றி நேயர்கள் அறிந்து கொண்டார்கள் என்று நம்புகின்றேன். சரி கேள்வியும் பதிலும் நேரம் முடிந்தது.