அறிவு சார் சொத்துரிமை பாதுகாப்பு பற்றிய அறிக்கை நேற்று தென் சீனாவின் Guang Zhou நகரில் வெளியிடப்பட்டது. சீனப் பொருட்காட்சி துறையைச் சேர்ந்த சுமார் ஆயிரம் நிறுவனங்கள் இதில் கூட்டாக கையொப்பமிட்டுள்ளன. இவை ஏற்பாடு செய்யும் பொருட்காட்சிகளில், களவாடி காப்பி அடிப்பது உள்ளிட்ட அறிவு சார் சொத்துரிமை மீறும் செயல்களுக்கு தடை விதிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளன. சீனச் சர்வதேசப் பொருட்காட்சி பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய கருத்தரங்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. கருத்தரங்கின் போது, சீன சர்வதேச வர்த்தக வளர்ச்சிக் கமிட்டியும், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பொருட்காட்சி நிர்வாக சங்கமும், அறிவு சார் சொத்துரிமை பாதுகாப்பு பற்றிய சீன-அமெரிக்க பொருட்காட்சி துறையின் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டன. அறிவு சார் சொத்துரிமை பாதுகாப்பை வலுப்படுத்துவதால், சீனப் பொருட்காட்சி துறை சீராக வளர முடியும் என்று அதன் அதிகார் ஒருவர் கூறினார்.
|