• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-13 20:45:41    
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் வாங் ச்சேங்

cri
கலை வாழ்க்கை என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி, சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய புகழ்பெற்ற கலை இலக்கியம் பற்றிய பேட்டி நிகழ்ச்சியாகும். அதன் தயாரிப்பாளர், வாங் ச்சேங் அம்மையார்.

வாங்ச்சேங், ஒரு இளம் பெண்மணி. அவருடைய எளிமையான தோற்றத்தில், பக்குவமும் நிதானமும் தெரிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், மத்திய தொலைக்காட்சி நிலையத்தில், அவர், கலை வாழ்க்கை என்னும் நிகழ்ச்சியை தொடங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் விகிதம், எப்பொழுதும் முன்னணியில் உள்ளது. சீன நடிப்பு கலையைப் போதியளவில் புரிந்துகொண்டு, ஒவ்வொரு விருந்தினரையும் நேர்மை மனபான்மையுடன் அணுகுவதால், கலை வாழ்க்கை நிகழ்ச்சி, இன்றைக்கு பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று வாங்ச்சேங் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

கலை வாழ்க்கை என்னும் நிகழ்ச்சி, எனக்கு மிகவும் பிடிக்கிறது. இந்நிகழ்ச்சியில், மக்கள், வாழ்க்கையை விவாதிக்கலாம். மக்களின் மனம் உணர்ச்சி வசப்படலாம். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் நேர்மையை உறுதியாகப் பின்பற்றுகின்றோம். ஒவ்வொரு விருந்தினரிடமும், ரசிகர்களிடமும், மனம் திறந்து, கருத்து வெளியிடும் போது நேர்மையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

கலை வாழ்க்கை என்னும் நிகழ்ச்சி, வாரத்துக்கு ஒரு முறை, 50 நிமிடங்களுக்கு ஒளிப்பரப்பானது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 200 சீனக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமது கலை இலட்சியத்தையும் வாழ்க்கையையும் பற்றிக் கூறியுள்ளனர். நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்படும் போது, ரசிகர்கள், கலைஞர்களின் கதையைக் கேட்டு மகிழ்ச்சியாகவோ அதிர்ச்சியாகவோ உணர்ந்துள்ளனர். கலை வாழ்க்கை என்னும் நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு என்ன வென்றால், ஒவ்வொரு கலைஞரும் ஒளிப்பதிவு அறையில் நுழைந்ததுமே, நிகழ்ச்சி நடத்துபவரின் உணர்வைப் புரிந்து கொள்ளலாம். இதனால், அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்து, மனம் திறந்து பேசுகின்றனர். இந்த நிலைமை வேண்டுமென்றே உருவாக்கப்படுவது இல்லை என்று வாங்ச்சேங் கூறினார். அவர் கூறியதாவது:

எமது நிகழ்ச்சியில், கண்ணீரை வேண்டுமென்றே வருவழைப்பதில்லை. உண்மை தான் வரவழைக்கப்படுகிறது. சீன மக்களுக்கு தற்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு மேடை தேவைப்படுகின்றது. எமது நிகழ்ச்சி, கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. பல முதுபெரும் கலைஞர்களின் வாழ்க்கையில் நிலவிய பிரச்சினைகளை, அவர்கள், கலை வாழ்க்கை என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர் என்றார் வாங்ச்சேங்.