சீனாவின் பாதுகாப்புடனும் பொருளாதாரத்துடனும் நெருங்கிய முக்கிய தொழில்களில் தேசிய மூலதனம் குவிக்கப்படும் என்று சீன அரசவையின் சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டியின் தலைவர் Li Rong Rong கூறியுள்ளார். நேற்று பெய்ஜிங்கில் தொழில் வளர்ச்சி கருத்தரங்கில் பேசிய அவர், பெரிய ரக அரசுத் தொழில் நிறுவனங்கள் பரவுவது குறைக்கப்பட்டு, அடிப்படை தொழில்கள், அடிப்படை சேவை, அடிப்படை சாதனங்கள் உள்ளிட்ட துறைகளில் அதிக மூலதனம் முதலீடு செய்யப்படும் என்றார். தவிர, போட்டியில் மேம்பாடு உடைய தொழில்களிலும், எதிர்காலத்தில் முக்கிய தொழில்களாக மாறக் கூடிய துறைகளிலும் மூலதனம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார். சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய, அறிவுசார் சொத்துரிமை கொண்ட பெரிய நிறுவனங்களிலும், பெரிய தொழில் குழுமங்களிலும் மூலதனம் போடப்படுவதை சீனா மேலும் ஊக்குவிக்கும் என்று Li Rong Rong தெரிவித்தார்.
|