• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-13 16:17:56    
Bai Ku Yao

cri

வெள்ளை கால்சட்டை அணிய விரும்புவதினால், "Bai Ku Yao" என்ற பெயர் சூட்டப்பட்டது. Yao இனத்தின் பல பிரிவுகளில் இது ஒன்றாகும். இன்று நாம் போய் பார்க்கவுள்ள Man Jiang Yao கிராமம், அவற்றில் அசல் உதாரணமாக விளங்கும் ஒரு கிராமமாகும். கிராமம் எங்கும், அனைவரும் வெள்ளைவெளேர் என்று கண்களுக்கு இனிய வெள்ளை நிற கால்சட்டை அணிவதை நேரில் காணலாம். பச்சைப் பசேல் என்ற மலைகளிடையே போய் வரும் இவ்வின மக்கள், இன்ப வாழ்க்கை நடத்துகின்றனர்.

இக்கிராமத்தில் சுமார் 40 குடும்பங்கள் மட்டுமே உள்ளன. ஆண், பெண் எல்லாருக்கும், ஒரே கறுப்பு நிற தலைமயிர் வளர்கின்றது என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம். கிராம தலைவர் Lu Cheng Zhong Yao இன மொழியில் எங்களுக்குத் தெரிவித்ததாவது:

திருமணமாகிய மூன்று ஆண்டுகளுக்குப் பின், எங்கள் Yao இன ஆண்கள், நீண்ட தலைமயிர் வளர்க்க விரும்புகின்றனர். தலைமயிரைச் சுத்தமாக்க நாங்கள் Shampooஐ பயன்படுத்துவதில்லை. எங்கள் Yao இனத்தவர் மதுவைத் தயாரிக்கும் போது மிஞ்சியுள்ள அரிசி களைந்த நீரைக் கொண்டு தலைமயிரைக் கழுவுகிறோம். எனவே, தலைமயிர் ஒரே கறுப்பு நிறமாக உள்ளது.

Bai Ku Yao இனத்தவரைப் பொறுத்த வரை, வாழ்க்கையில் மது இல்லாமல் இருக்கமுடியாது. கிராமத்திலுள்ள குடும்பங்கள் அனைத்தும் மது தயாரிக்கின்றன. தாம் தயாரித்துள்ள மது இப்பிரதேசத்தில் பிரபலமாக இருப்பதால், சந்தைக்குப் போகும் போதெல்லாம், மதுவைச் சந்தைக்குக் கொண்டு செல்வதாக Lu Cheng Zhong தெரிவித்தார்.

அடர்த்திய மலைகளில் வசிக்கும் Bai Ku Yao இன மக்கள் உருவாக்கிய சந்தை தனித்தன்மை வாய்ந்தது. பொதுவாக பகல் சந்தை எனவும், இரவு சந்தை எனவும் பிரிக்கப்படுகின்றது. பகலில், முக்கியமாக, பொருள் பரிமாற்றம் நடைபெறுகிறது. இரவிலோ, உணர்ச்சிப்பரிமாற்றம் நிகழ்கிறது. அவர் கூறியதாவது:

சந்தைக்குச் செல்வது என்பது, இங்கு வாழும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு தடவையும், அனைவரும் சொந்தமாக தயாரிக்க எழிலான ஆடைகளை அணிந்து, 5 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான இடத்திலிருந்து வட்டம் செல்வார்கள். பகலில் மட்டுமல்ல, இரவிலும் அப்படியே. இரவுச் சந்தை, முக்கியமாக, இளம் ஆண்-பெண் தொடர்பு கொள்ளும் இடமாகத் திகழ்கின்றது.