• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-14 18:08:14    
2005ம் ஆண்டு சிங்கியாங் வெளிநாட்டு வர்த்தக மதிப்பு

cri
2005ம் ஆண்டு வட மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தின் வெளிநாட்டு வர்த்தக மதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. முழு ஆண்டிலும் அதன் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு சுமார் 800 கோடி அமெரிக்க டாலராகி, மேற்கு சீனாவின் 12 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் முதலிடம் வகிக்கின்றது. புள்ளி விவரங்களின் படி, கடந்த ஆண்டு, அதன் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு, 2004ம் ஆண்டில் இருந்ததை விட 40 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. கஜக்ஸ்தானை முக்கியமாகக்கொண்ட மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளும் பிரதேசங்களும், சிங்கியாங்கின் வெளிநாட்டு வர்த்தகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆடைகள், இயந்திர சாதன மின்சார உற்பத்திப் பொருட்கள் அதன் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும். கச்சா எண்ணெய், இரும்புத் தாது முதலியவை அதன் முக்கிய இறக்குமதிப் பொருட்களாகும். சிங்கியாங்கின் வெளிநாட்டு வர்த்தகத்தின் விரைவான வளர்ச்சி, சீனாவுக்கும் மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகள்-பிரதேசங்களுக்குமிடை மண்டல பொருளாதார ஒத்துழைப்புக்கு சிறந்த அடிப்படையிட்டுள்ளது.