ஆசியாவின் மிகப் பெரிய காற்று ஆற்றல் பின்னாக்கி
cri
ஆசியாவின் மிகப் பெரிய காற்று ஆற்றல் மின்னாக்கிகள் கிழக்கு சீனாவின் கடலோர நகரான Qing Daoஇல் பொறுத்தப்படும். Qing Dao கடலோர நீர்ப்பரப்பில் 5 காற்று ஆற்றல் மின்னாக்கிகளை நிறுவுவதென, சீனாவும் ஜெர்மனியும் திட்டமிட்டுள்ளன. இத்திட்டப்பணிக்கென, ஐந்து கோடி யுரோ முதலீடு செய்யப்படும். சீனாவின் முதலாவது கடல்ப்பரப்பு பெரிய ரக காற்று ஆற்றல் மின்பிறப்பு திட்டப்பணி, இதுவாகும். 2008ம் ஆண்டின் துவக்கத்தில் இது உற்பத்தியில் இறங்கும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை நனவாக்கவும், அணு ஆற்றல் மின் மற்றும் காற்று ஆற்றல் மின் பயன்பாட்டு அளவைச் சீன அரசு வலுப்படுத்தி வருகின்றது. அதே வேளையில், சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதோடு, கிராமப்புறத்தில் மித்தேன் வாயு பயன்பாட்டு விகிதம் உயர்த்தப்படுகின்றது.
|
|