• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-19 16:59:19    
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

 


cri

இவ்வாண்டு பிப்ரவரி திங்கள் 10ஆம் நாள், 20வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இத்தாலியின் துர்லிங் நகரில் துவங்க உள்ளன. 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற சோல்ட் லேக் நகர குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்கம் இல்லாத நிலையை முடித்துக்கொண்ட சீனப் பிரதிநிதிக் குழு இந்த முறை மேலும் சிறந்த சாதனையை பெற எதிர்பார்க்கின்றது.

2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பார்த்தவர்கள் அனைவரும் அந்த முறை சீன விளையாட்டு வீரர்கள் பெற்ற சாதனையை அறிந்தனர். சீனப் பிரதிநிதிக் குழு 32 தங்கப் பதக்கங்களை பெற்று ரஷியாவைத் தாண்டி, இரண்டாம் இடத்துக்கு உயர்ந்தது. ஆனால், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன அணி பெற்றுள்ள சாதனை இந்த நிலையை எட்டவில்லை.

பனித் தளங்களில் சீன விளையாட்டு வீரர்கள் இன்னும் துவக்க நிலை மாணவர்களாக இருக்கின்றனர். இருப்பினும், சீன வீரர்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். 2002ஆம் ஆண்டின் சோல்ட் லெக் நகர குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான குறுகிய தூர விரைவு பனிச்சறுக்கலில் சீன வீரர் யாங் யாங் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றார். இதனால் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் சீனாவுக்கு தங்கப்பதக்கம் இல்லை என்று நிலை முறியடிக்கப்பட்டது.

இந்த அடிப்பயைடைக் கொண்ட சீன விளையாட்டுப் பிரதிநிதிகுழு 2006ஆம் ஆண்டு குளிர்கால குளிர்கால் விளையாட்டுப போட்டியில் மேலும் உயர் குறிக்கோளை வைத்துக்கொள்வது இயல்பானது மேலும் உயர் குறிகோள் என்பது கூடுதலான தங்கப் பதக்கங்களைப் பெற பாடுபடுவது மட்டுமல்ல, சில பலவீனமான நிகழ்ச்சிகளிலும் நல்ல சாதனையை நிகழ்த்தி, முன்னேற்றம் காண்பது மிக முக்கியமானது என்று சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் வாங் ஜி தௌ கூறியுள்ளார்.