• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-20 09:12:39    
தூர்லிங் ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவின் வாய்ப்பு

cri

குறுகிய தூர விரைவுப் பனிச்சறுக்கல் என்பது, சீனாவின் பாரம்பரிய வலுவான நிகழ்ச்சியாகும். கடந்த முறை, சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனை யாங் யாங் இந்த முறையும் கலந்கொள்வார். மகளிருக்கான 500 மீட்டர் விரைவுப் பனிச்சறுக்கல் போட்டியில் சீன அணி தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பு மிக அதிகம். ஆனால், தற்போது, இந்த நிகழ்ச்சியில் சீன அணியில், யாங் யாங் அல்ல, புதிய வீராங்கனை வாங் மொங் மேலும் அதிக திறமையைக் கொண்டவராவார். 2005-2006 போட்டிப் பருவத்தில் ஏற்கனவே நடைபெற்ற நான்கு சுற்றுப் போட்டிகளிலும் வாங் மொங், 500 மீட்டர் நிகழ்ச்சியின் அனைத்து தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.

எனவே, தூர்லிங் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெறுவதில் அதிகமாக எதிர்பார்க்கப்படலாம். இந்த தூர்லிங் குளிர்கால விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவதில் அவருக்கும் நம்பிக்கை ஆர்வம் உண்டு என்று சீன குறுகிய தூர விரைவுப் பனிச்சறுக்கல் அணியின் தலைமை பயிற்சியாளர் சின் ச்சிங் சான் கருத்து தெரிவித்தார்.

விளையாட்டு வீராங்கனையான நான், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது எனது மிக பெரிய கனவாகும். ஆனால், தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பு என்னை நெருங்கி வரும் போது, எனது இலக்கும் மேலும் உயரமாக இருக்க வேண்டும் என்று வாங் மொங் கூறினார்.

தவிரவும், சீனாவின் இசை நடன பனிச்சறுக்கல் வீராங்கனை சென் சியே வீரர் சௌ ஹுங் போ ஜோடி கடந்த முறை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர். தூர்லிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்த நிகழ்ச்சியில் தங்க பதக்கம் பெறும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் திங்களில் பயிற்சி செய்த போது, சௌ ஹுங் போ எதிர்பாராதவாறு கால் காயமடைந்ததால், இந்த ஜோடிக்கு தங்கம் பெறும் வாய்ப்பு குறைந்துள்ளது.

இது, சாங் டான், சாங் ஹௌ ஜோடிக்கு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் இந்த முறை மிக அதிகமாக தங்கம் பெறுவார்கள். இந்த இரணடு இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற பல சர்வதேச போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றனர். கடந்த டிசம்பர் திங்களில் நடைபெற்ற ஒட்டுமொத்த இறுதிப் போட்டியில் அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர். தூர்லிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர்கள் மிக சிறப்பாக விளையாடினால், அவர்கள் தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பு மிக அதிகம். பெறாவிட்டாலும் அவர்கள் உலகில் மிக புகழ்பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை அணியில் சேர்ந்திருப்பார்கள்.

நெடுங் கண்பார்வையுடன் பார்த்தால், அவர்களைப் பொறுத்தவரையில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவது நிறைவேற்றப்பட கூடிய ஒரு இலக்காகும். முன்பு பலவீனமாக இருந்த சில நிகழ்ச்சிகளிலும் சீன அணி தற்போது தங்கப் பதக்கம் பெறும் ஆற்றலை கொண்டுள்ளது. வெற்றிபெற்றால் குறிப்பிடத்த முன்னேற்றம் காணப்படும். 1998ஆம் ஆண்டடு ஜப்பானில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான சுதந்திர பாணி உறைப்பனி சறுக்கலில் சீன அணி வெள்ளி பதக்கம் பெற்றது.

உலக சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை லீ நி நா, மிகவும் கஷ்டமான செயல்பாட்டை நிறைவேற்ற வல்ல சீன வீராங்கனை கோ சிந் சிந் உள்ளிட்ட பல இளைஞர்களின் திறமை பல இதர நாடுகளின் வீராங்கனைகளை தோற்கடிப்பதில் அவர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. எனவே, தூர்லிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன வீரர்கள் பெரும் சாதனை பெறும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது என்று நம்பிக்கையுடன் கூறலாம்.