• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-16 10:26:24    
இரட்டை தலை பாம்பு

cri

சீனாவில் ஷின்யாங் நகரில் அதிசய இரட்டை தலை பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. அன்த ஊரைச் சேர்ந்த யாங் என்பவர் தோட்டத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு பேயில் அந்த பாம்பு இருந்தது. உடனே அந்த அதிசய பாம்பை யாங் எடுத்து தனது செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வருகிறார்.

பாம்பின் இரண்டு தலைப் பகுதியும் நன்றாக வளர்ச்சி பெற்று கண்கள், வாய் போன்றவை தனித்தனியே காட்சி தருகிறது. உடல் பகுதி சிவப்பு மற்றும் கறுப்பு நிற வளையங்களுடன் பார்கக் அழகாக இருக்கிறது. சுமார் 2 அடி நீளம் இருக்கும் அது பெருவிரல் பருமன் கொண்டிருக்கிறது.

இந்த அதிசய பாம்பு பற்றி யாங் கூறிம்போது, "கண்டெலி இதற்கு பிடித்தமான உணவு. விரும்பி சாப்பிடுகிறது"என்றார்.

போலீஸ் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக இந்தியாவில் முதல் முறையாக புறாவிடுதாது பணியை துவக்கியது ஒரிசா மாநிலம் தான். கடந்த 1946ம் ஆண்டு இந்த பணி துவங்கப்பட்டது. இன்றும் இந்த பணி நீடிப்பது இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் தான். அனுப்ப வேண்டிய தகவல் ஒரு சிறு குப்பியில் போடப்பட்டு புறாவின் காலில் கட்டப்பட்டும். இவ்வாறு ஒரே தகவலுடன் இரண்டு புறாக்கள் அனுப்பப்படும். ஏதாவது ஒரு புறாவாவது குறிப்பிட்ட இடத்தை சரியாக அடைந்து விடும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. "ஒரு போதும் புறாக்கள் கடமையில் தவறியதே கிடையாது"என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. இப்போது அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வந்து விட்டன. இனி புறாக்கள் தேவைப்படாது. விரைவில் அவைகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விடும்.

 

"மது குடிப்பது மூளைக்கு நல்லது"

அளவுடன் மது அருந்துவது மூளைக்கு நல்லது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் எலியிடம் நடத்திய பரிசோதனைக்குப் பிறகு, நினைவாற்றலைப் பெருக்கவும், மூளை செல்களின் வளர்ச்சிக்கும் அளவுடன் மது அருந்துவது நல்லது என்று அறிவித்து உள்ளனர்.