• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-16 10:33:43    
சீன-இந்திய எரியாற்றல் ஒத்துழைப்பு

cri

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டு நிறுவனமும் சீன எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழும நிறுவனமும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை முதல்முறையாக கூட்டாக வாங்குவதில் வெற்றி பெற்றுள்ளன என்று இந்துஸ்தான் டைம்ஸ் எனும் இந்திய செய்தியேடு டிசம்பர் 20ஆம் நாள் அறிவித்தது.

கடந்த செப்டம்பர் திங்களில், சிரியாவின் யூப்ரைடிஸ் எண்ணெய் நிறுவனத்திலுள்ள தனது 38 விழுக்காட்டு பங்குகளை விற்க விரும்புவதாக கனடா நாட்டு எண்ணெய் நிறுவனம் அறிவித்தது. சீன இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து கடும் முயற்சிமூலம், இறுதியில் 57.8 கோடி அமெரிக்க டாலர் என்ற மொத்த விலையில் எதிராளியைத் தோற்கடித்து, வெற்றிகரமாக பங்குகளை வாங்கின. இதில் சீன-இந்திய இரு நிறுவனங்களுக்கும் தலா 50 விழுக்காட்டு பங்குகள் கிடைக்கும்.

இதன் மூலம், எரியாற்றல் துறையில் சீனாவுடன் ஒத்துழைப்பதில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுள்ளது. சீன இந்திய இருநாட்டு நிறுவனங்கள் இந்த நடவடிக்கையில் வெற்றி பெற்றிருப்பது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் இரு நாடுகளின் எதிர்கால எரியாற்றல் ஒத்துழைப்புக்கு வழிகாட்டுவதாக உள்ளது. என்றும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் செயலாளர் சுசீல் திரிபாதி செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அமைச்சர் மணிசங்கர அய்யர் 2006ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் சீனாவுக்கு வருகை தருவார். எரிபொருள் கொள்முதலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டியை இயன்ற அளவில் தவிர்க்கும் வகையில் இரு நாடுகளும் ஓர் ஒத்துழைப்பு உடன்படிக்கையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஒத்துழைப்புக்குப் பின், இரு நாட்டு நிறுவனங்களும் இதர பிரதேசங்களில் தொடர்ந்து ஒத்துழைக்க நாங்கள் பாடுபடுவோம் என்றும் திரிபாதி கூறினார்.

விரைவான பொருளாதார வளர்ச்சியுடன், இந்தியாவின் எரியாற்றலுக்கான தேவையும் மேலும் பெருகிவருகின்றது. ஆனால் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களின் வெளிநாட்டு கிளைகள் மிகவும் தாமதமாகவே நிறுவப்பட்டதால், அவை வெளிநாடுகளில் நடைபெற்ற சில பெரிய அளவிலான எண்ணெய் கொள்முதல் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலைமையில், சீனாவுடன் மேலும் நெருக்கமாக ஒத்துழைக்கும் ஒரு வாய்ப்பை இந்திய அரசு எதிர்பார்த்து வந்தது. இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் போட்டியிட்டால் மூன்றாவது நாடுதான் பயன் பெறும் என்று இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் பல முறை கூறியிருந்தார். 2005ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற "சீனாவின் அதிசயம்"என்ற தலைப்பிலான ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், உலகில் எரியாற்றல் பாதுகாப்பு துறையிலான இரு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தன்னிச்சையுடன் விலை கேட்பதைத் தடுக்க வேண்டும் என்று கூறினார்.

உலகில் இரண்டாவது, ஆறாவது எரியாற்றல் நுகர்வு நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஒன்றுசேர்ந்து செயல்படுவது பல மேலை நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கொள்முதல் நடவடிக்கை அளவில் பெரியதாக இல்லை என்ற போதிலும், இவ்விரு நிறுவனங்களின் கையிருப்பு இதனால் பெரிதும் அதிகரிக்காத போதிலும், இந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய மாற்றத்தை அதாவது, இயற்கை வளத்துக்காக போட்டியிட்ட சீனாவும் இந்தியாவும் இப்போது எரியாற்றல் பாதுகாப்புக்காக பரஸ்பரம் ஒத்துழைக்கின்றன என்று "பைனான்சியல் டைம்ஸ்" என்னும் பிரிட்டிஷ் செய்தியேட்டின் ஒரு கட்டுரை கூறுகின்றது.

இந்த கொள்முதல் ஒரு அறிகுறியாகவும் திகழ்கின்றது. அதாவது அமெரிக்காவின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்ட பிரதேசங்களில், சீனா, இந்தியா உள்ளிட்ட புதிய பொருளாதார வல்லரசுகள் எரியாற்றல் வளத்தை தேடக் கூடிய முக்கிய இலக்காக மாறியுள்ளன என்று கட்டுரை கூறுகின்றது.