கடந்த 5 ஆண்டுகளில், சீனாவில் 242 கோடி டன் எண்ணெய் மற்றும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயுப் படிவுகள் இருப்பதை உறுதிப்படுத்தும் புதிய தகவலை சீன எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குழுமம் அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட இந்த எண்ணெய்ப் படிவுகள், சீனாவின் எண்ணெய் வளத்தில் சுமார் முப்பதில் ஒரு பகுதியாகும். புதிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளத்தின் மதிப்பீட்டின் படி, சீனாவில் எண்ணெய் உற்பத்தி அளவு, 2010ஆம் ஆண்டில் 20 கோடி டனை எட்டக்கூடும். 15 ஆண்டுகளாக இந்த அளவு நிலைநிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
|