மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கருத்துக்கள்
cri
பேளுக்குறிச்சி க செந்தில் அறிவியல் அணுக்குகளில் ஆண்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் என்ற தகவல் அதிர்ச்சி தந்தது என்கிறார். அறிவியல் உலகம் நிகழ்ச்சியைக் கேட்கத் தவறுவது இல்லை என்று கூறுகிறார்.
வளவனூர் புதூர் எஸ் ராமபத்ரன் தமிழில் மின்னஞ்சல் அனுப்ப தமக்கு செல்வம் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறார். 1988இல் சீன வானொலியுடன் தமக்கு ஏற்பட்ட தொடர்பு நடுவில் தொய்ந்த போதிலும் தொடர்கிறது என்கிறார். வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் தமது மின்னஞ்சல்களில் டிசம்பர் 7ம் நாள் நட்புப் பாலம் நிகழ்ச்சியில் சாரதா அம்மையாரின் பேட்டி முடிந்தது. இது தொடர்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் எழுந்தது என்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் பல பழைய நேயர்கள் சொந்தப் பிரச்சினைகளைல் கற்போது கடிதம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டனர். அவர்களை சந்தித்து மீண்டும் கடிதம் எழுதத் தூண்டுகிறோம் என்கிறார். பொன் ஏழிசை வல்லபி தமது மின்னஞ்சலில் டிசம்பர் 10 சீனத் தேசிய இனக்குடும்ப நிகழ்ச்சியில் சாதாரணக் கடைநிலையில் இருந்த ஒரு பெண்மணி ஈஷ் திபெத் கமிட்டி உறுப்பினராக உயர்ந்தது பற்றிய தகவலை பாராட்டி, இத்தகைய மனிதர்களால் தான் சீனா தலை நிமிர்ந்து நிற்கிறது என்கிறார்.
நேயர்கலின் பாராட்டுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி. தொடர்ந்து தொடர்பு கொள்ளுங்கள். மீண்டும் 18வது நேயர் மன்ற மாநாடு முடிந்ததும் சந்திப்போம். அப்போது மாநாட்டின் வெற்றிச் செய்திகளை பகிர்ந்து கொள்வோம். நன்றி.
மதுரை அவனியாபுரம் கோ எஸ் வெங்கடேஷ், மேத்திங்களில் ஒலிபரப்பான மலர்ச் சோலை நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் சின்னவளையம் பி பி பிரகாஷ் அக்டோபர் 3 உணவு அரங்கத்தில் செலரி, வெள்ளிரிக்காய் கோழி இன்றிச்சி, பூண்டு, கொண்டு தயாரிக்கப்படும் நாடுல்லில் வகை பற்றி கேட்டோம். சரியான கலவையில் சேர்த்தைல் தான் சுவையாக இருக்கிறது என்கிறார். உத்தரக்குடி நேயர் சு கலைவாணன் ராதிகா, உணவு அரங்கத்தில் அரைத்த மானவயே திரும்ப அரைக்காதீர்கள் என்கிறார். ஒரு பைத்தியக் காரணின் டைரி கதையில் மனிதளை மனிதன் தின்மான் என்பது அருவருப்பாக இருந்தாலும், கதை போகப் போக திசிலாக இருந்தது. கதை தத்ரூபமாக சொல்லப்பட்டது என்று கூறியுள்ளார். சீன வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக மக்களின் பொது அறிவு விருத்தி அடைகிறது என்று எழுதியுள்ளார். இலங்கை காத்தான்குடி நேயர் ஏ ஏ எம் காஜித் மற்றொரு காத்தான்குடி நேயர் எம் எம் எப் மபாஸா, பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார்.
உணவு அரங்கத்தில் வித்தியாசனம் காட்ட முயற்சிக்கிறோம். கதையில் மனித மாமிசம் தின்பது என்பது உண்மை நிகழ்வு அல்ல. சமூலத்தின் அவலத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு குறியீடுதான். பாராட்டுக்கு நன்றி.
இந்த வார மின்னஞ்சல்களில் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 17வது கருத்தரங்கு பற்றிய செய்திகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. நேயர் மன்றத்தலைவர் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் கருத்தரங்கில் 97ம் ஆற்றிய உரையை அனுப்பியுள்ளார். அவர் தமது உரையில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் சாதனைகளையும், நேயர் மன்றத்தின் சாதனைகளையும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். நேயர் கடித எண்ணிக்கையில் முதலிடம், தமிழ்ப் பிரிவின் இணையம் செம்மையாக வடிவமைக்கப்பட்டிருப்பது தினமும் காலை எட்டரை மலை முதல் 9:30 மணி வரை நான்காவது ஒலிபரப்பு தொடங்கியிருப்பது ஆகியன தமிழ்ப்பிரிவின் சாதனைகள் என்றும் தமிழ் நேயர் மன்றத்திற்காக தனி இணைய தளம் நிறுவப்பட்டது.
|
|