• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-09 17:04:58    
நிங்சியாவில் சுற்றுலா மூலவளம்

cri

வட மேற்கு சீனாவில் அமைந்துள்ள நிங்சியா உய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திலான சுற்றுலாத் துறையானது, இப்பிரதேசத்தின் பழம் பெருமை வாய்ந்த வரலாறு மற்றும் பண்பாட்டின் துணையால், பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனம் இங்கே வாழத் தலைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த சில நூற்றாண்டுகளில் சீனாவில் முஸ்லிம் இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாக இது மாறிவிட்டது. 1958இல் யின்சுவானைத் தலைநகராகக் கொண்டு, நிங்சியா உய் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது என்பது அறிந்து கொள்ள வேண்டிய தகவலாகும். இப்பிரதேசத்தில் உள்ள மசூதிகளின் கட்டடக் கலை அமைப்பு, தனித் தன்மை வாய்ந்தது. நகர்ப்புறம், கிராமப்புறம் என்று எங்கெங்கும் மசூதிகள் காணப்படுகின்றன. திருமறையை ஒதுவது, தொழுகை நடத்துவது, காலையிலும் மாலையிலும் மசூதிகளில் மணியடிப்பது முதலான செயல்களால் இப்பிரதேசத்தில் முஸ்லிம் இன மக்கள் இருக்கின்றனர் என்பது கண்கூடாக வெளிப்படும்.

இப்பிரதேசத்துக்கு வருகை தருவோர் உள்ளூர் மக்களின் பழக்க வழக்கங்களில் உள்ளத்தைப் பறிக்கொடுப்பார்கள் என்று கூறலாம். நிங்சியாவில் சீனப் பெரும் சுவரின் எச்சங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில, கி.மு. 475-221 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. சொங்வெய் எனும் இடத்தில் உள்ள மத்தளக் கோபுரமானது, சுற்றுச்சூழலைப் பேணிக்காப்பதில் உள்ளூர் மக்கள் காட்டும் அக்கறையின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. நிங்சியாவின் பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியகங்கள் எவரும் மறவாது காணக்கூடியவை. கல்லறைகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த பொருட்கள் நிங்சியா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 200 ஆண்டுகளுக்கு முன்பே, மேற்கு சியா ஆட்சி மறைந்துவிட்ட போதிலும், அதன் பௌத்த திருமறை ஆவணங்கள் மட்டும் இன்று வரை மக்களை ஈர்த்து வருகின்றன. இந்தப் பிரதேசத்தில் காணப்படும் பழைய கோயில்கள், கட்டிடங்கள், மாடங்கள் ஆகியவை பல்வகை கட்டிடக்கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.

அத்துடன் கன்பூசியஸம், பௌத்த மதம், தாவோ மதம் ஆகியவற்றின் கலவையாகவும் பறைசாற்றுகின்றன. இங்குள்ள புத்த கோயில்கள், குகைக்கோயில்கள் முதலானவற்றைச் சுற்றி மசூதிகள் காணப்படுகின்றன. ஆனாலும் மதப்பிரச்சினைக்கு இவை இடம் தரவில்லை. நிங்சியாவில் சுற்றுலா வருவோருக்கு அதிசயமாக திகழ்வதைக் கூறாமல் இருக்க முடியுமா?இங்குள்ள மணற் குன்றுகள் காற்று வீசும் காலத்தில் மணியோசையை எழுப்புகின்றன என்பது தான் அந்த அதிசயம். பழம்பெருமை வாய்ந்த பட்டுப்பாதை தண்ணீர்க் குகை பள்ளத்தாக்கு, பாறை ஓவியங்கள் ஆகியவையும் இந்தப் பிரதேசத்தின் சுற்றுலா மூலவளங்களாகும். அமையில், புதிதாகக் கட்டப்பட்ட திரைப்பட மற்றும் தொலைக் காட்சி மையக் கட்டிடமும் காண்போரின் கண்ணுக்கு விருந்து படைக்க வல்லது.

இனி புகழ்பெற்ற காட்சித்தலங்களையும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துவோம். தலைநகருக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் அரிய அருங்காட்சியகம் உண்டு. இங்கே 193 பிரபுக்கள் உயர் அதிகாரிகள் ஆகியோரின் கல்லறைகள் உண்டு. பழைய கோயிலும் உண்டு. தவிர, பத்து செங்கற்சூளைகளும் உண்டு. தலைநகருக்கு 50 கிலோமீட்டர் தொலைவில் ஹீலான் மலைப் பகுதியில் 1000 பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஆடு, மாடு, குதிரை, கழுதை, சூரியன், சந்திரன், நட்சத்திரம், மனித கைகள், கால்கள் ஆகியவற்றின் ஓவியங்கள் இழற்றில் அடங்கும். வேட்டையாடுவது, கடவுளுக்கும் முன்னோருக்கும் பலியிடுவது தொடர்பான கதைகள் இங்கே ஓவியங்களாக உயிர் பெற்றுள்ளன. அடுத்து நீங்கள் காணவிருப்பது, நாங்குவான் மசூதியாகும். பத்தாயிரம் சதுர மீட்டர் பரப்பில், 1981இல் இது கட்டப்பட்டது. 1300 பேர் இங்கே ஒரே நேரத்தில் தொழுகை நடத்த முடியும். மணி மற்றும் மத்தளக்கோபுரம் என்பதை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். இதன் உயரம் 36 மீட்டர். இங்கோ யின்யுவான் கலைக்கூடம் அமைந்துள்ளது.