
அலங்காரம்

நிங்சியாவின் தனிச்சிறப்பு

நடனம்
நிங்சியா உய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகருக்கு 56 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷஉ சுற்றுலாத் தலமானது, 140 வகைப்பட்ட விலங்குகளுக்கும் 100 வகைப்பட்ட பறவைகளுக்கும் வசிப்பிடமாகும். 1989இல் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, இங்கே வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், நீர் சூழ்ந்த தெற்கு சீன கிராமங்களுக்கும் உய் நாட்டுப்புறத் தோட்டங்களுக்கும் சென்று வரவும் புல்வெளிகளிலான கூடாரங்களில் தங்கி இரவுப் பொழுதைக் கழிக்கவும் ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன. இங்கே நிறுவப்பட்டுள்ள மேற்கு சீன திரைப்படம் மற்றும் தொலைக்காசி மையம் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. உலக புகழ்பெற்ற சீனத் திரைப்படமான சிவப்பு சோளம் இங்குதான் தயாரிக்கப்பட்டது. தெங்கார் பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள ஷபோது இயற்கைக் காட்சித் தலமானது, மணற்கடல் எனும் பெயர் பெற்றது. இங்கேயுள்ள மணற்குன்றில் 100 மீட்டர் உயரத்திலிருந்து நாம் குதித்துக் கீழே வரலாம். கீழே வந்தடையும் இடத்தில் நீருற்று உண்டு. அதற்கு தெற்கே பழமரங்கள் உண்டு. இலவசமாகப் பழங்களை நீங்கள் பறித்துக்கொள்ளலாம். என்ன நேயர்களே! நிங்சியா பிரதேசத்து சுற்றுலா மூலவளங்களைத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? நீங்கள் அனைவரும் ஒரு முறை இங்கே வந்து போகலாமே!
|