• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-23 18:17:13    
சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திடும் ஜியாங்சி

cri

சீனாவின் ஜியாங்சி மாநிலம், சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் மாநிலம் என்றால் அது மிகையல்ல. எப்படி என்று இப்போது பார்ப்போம். மூன்று பழமையான நகரங்கள் ஜியாங்சியில் உள்ளன. ஒன்று நான்சாங். இங்கு தான் மக்கள் விடுதளைப் படை உருவாக்கப்பட்டது. இரண்டாவது, ஜிங்தெஷென், சீனாவின் பீங்கான் தலைநகரம் எனும் பெருமை பெற்றது. மூன்றாவது, கன்ஷவ். சீனத் தனிச்சிறப்பியல்பு படைத்த பண்பாட்டு நகரம் இது. தவிர, புகழ்பெற்ற மலைகளும் கோயில்களும் இங்கே உள்ளன. இங்குள்ள போயாங் ஏரியானது, சீனாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியாகும். இனி, ஜியாங்சியின் காட்சித் தலங்கள் பற்றி, விரிவாகக் காண்போம். நான்சங் நகரத்தின் நான்கு பக்கமும் ஏரிகள் சூழந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். நகரின் நடுவிலும் ஒரு ஏறி. சிங்ஷன் ஏரி என்பது அதன் பெயர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் இங்கே நிறைய உண்டு. தெங் இளவரசன் கோபுரம் என்பது, அவற்றில் ஒன்று. லி யுவான்யிங் என்பவரால் 653இல் இது கட்டப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில் இது 28 முறை அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கட்டப்பட்டுள்ளது என்பது இதன் வரலாறு.

தற்போது, காணப்படும் கோபுரம் 1989இல் கட்டப்பட்டது. இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தக் கோபுரம், 9 அடுக்கு கொண்டது. இதன் நீளம் 57.5 மீட்டர். இதன் மொத்த பரப்பளவு 15 ஆயிரம் சதுர மீட்டராகும். நீலமேக தாவோக் கோயில் என்பது, மற்றொன்று. தலைநகருக்குத் தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு ஒரு ஹெக்டேர் மட்டும் தான். வெண்ணிற சுவர்கள், பழமையைன மரங்கள் சுற்றிலும் தூய்மையான நீர்ப்பரப்பு என்று மிக மிக அமைதியான சூழலில் வெகு அருமையாக இது காட்சி தருகிறது. தற்போது காமப்படும் இந்தக் கட்டிடம் 1979இல் மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டது. இட அமைப்புக்கு ஏற்றவாறு, இங்கே மலர்களும் மரங்களும் செடிகளும் நடப்பட்டுள்ளன. காண்பதற்கு அரிய காட்சியை இது வழங்குகின்றது. இன்று-சுற்றுலாப் பயணிகளை கவரும் புதிய இடமாகவும் கலைஞர்களுக்குப் பண்பாட்டு மையமாகவும் இது விளங்குகின்றது. இனி, 150 சதுர கிலோமீட்டர் பரப்பில், மேலைக் குன்றுப் பகுதிகளின் நடுப்பகுதியில் அமைந்திருப்பது பிளம் மலை முகடு. சின்ன லுஷான் மலை என்றும் இது அழைக்கப்படுகிறது. பல்வேறு அளவிலான 50 ஏரிகள் இங்கே உள்ளன. மிக அருமையான அருவிகள் உண்டு. தலைநகரில் காணக்கூடிய இடங்களைக் காண்போம். மண்ணில் காணும் மகத்தான காட்சி இங்கே கிடைக்கிறது என்று கூறுவர். கோடைகாலத்தின் மீதமான காலநிலை, இங்கே சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அச்சாணியாக உள்ளது.

உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களுள் ஒன்றாக யுனெஸ்கோ இதை அறிவித்துள்ளது. கன்தாங் ஏரியானது, 18 ஹெக்டேர் பரப்புடையது. லூஷான் மலையின் நீருற்று இங்கே ஏரிக்கு நீராகிறது. குளிர்ந்த மென்மையான காற்று வீசும் போது, சூரிய ஒளியில் ஏரி நீர் மின்னுவது, மறக்க முடியாத காட்சியாகும். மனதைப் பறித்தெடுக்கும் காட்சியுமாகும். சுற்றுலாப் பயணிகள் மறவாமல் பார்க்க வேண்டியது அலை பாயும் கிணறு. புகழ் பெற்ற இராணுவ அதிகாரி குவான் யிங் என்பவரால், கி.மு. 201ஆம் ஆண்டில் இது தோண்டப்பட்டது. யாங்சி ஆற்றுக்கு வெகு அருகாமையில் இருப்பதால், ஆற்றில் அலை ஏற்படும் போதெல்லாம், இந்தக் கிணற்றில் நீர் அலை பாய்வது காணத் தக்க காட்சியாகும். நெங்ரென் கோயில், 1870இல் புதுப்பிக்கப்பட்டது. இரும்பாலான புத்தர் சிலை கொண்ட அரங்கு, புத்த திருமறைகள் முதலானவை இங்கு உள்ளன. மொத்த பரப்பளவு 3000 சதுர மீட்டராகும். இனி, ஜியானில் உள்ள ஜிங்காங் மலைப் பிரதேசம் வழங்கும் சுற்றுலாச் சிறப்புகளைக் காண்போம். ஜியாங்சியின் நடுப்பகுதியில், ஆற்றங் கரையோரத்தில் ஜியான் நகரம் அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் பசுமையான மலைகள் உள்ளன. ஜிங்காங் மலைப்பகுதி, இன்பம் பயக்கும் காலநிலை கொண்டது. இந்த மலைப்பகுதிக்கு ஒரு வரலாற்றுப் பெருமை உண்டு.

கிராமப்புறத்திலான முதலாவது புரட்சித் தளத்தை மா சேதுங் இங்கு தான் நிறுவினார். இப்பகுதியிலுள்ள மஞ்சள் ஆற்று எல்லைப் பகுதி என்பது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வளவு உயரத்தில் நின்று பார்க்கும் போது, கீழே கடல் நீர் மலையை முட்டி மோதும் காட்சியில், உள்ளத்தைப் பறிகொடுக்காதவர் ஒருவருமே இருக்க மாட்டார். இதனால் தான் இந்தப் பெயர் வந்ததாகக் கூறுவர். இங்கு, மிகப்பெரிய மரம் ஒன்று உண்டு. சுமார் 100 அடி உயரம். பேர், இந்த மரத்தைக் கைகளால் சுற்றிவளைக்க வேண்டியிருக்கும் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். ஜியானுக்குத் தென் கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்யுவான் மலைகளில் புகழ்பெற்ற கோயில்கள், அருவிகள் எனக் கண்டுகளிக்க வேண்டியவை, ஏராளமாக உள்ளன. கன்ஜியாங் ஆறு தொடங்குமிடத்தில் கன்சவ் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள பழமையான சுவர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 960 முதல் 1127 வரை ஆட்சி புரிந்த வடக்கு சுங் வமிச ஆட்சிக்காலம் முதல் இவை பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னூறு மலை சுற்றுலாத் தளம் என்ற ஒன்று, இங்கு புதிதாக நிறுவப்பட்டது. 200 சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ள இத்தளம், நீர் வீழ்ச்சி எனப் பல உண்டு. இங்கு, தூய்மையான காற்று வீசுவது சிறப்பாக கவனிக்கத் தக்கது.