• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-20 13:22:15    
நிகழ்ச்சி தொகுப்பாளர் வாங்ச்சேங்

cri
கலையைப் பயன்படுத்தி உயிரூட்டுவது, உணர்ச்சியைப் பயன்படுத்தி மனதுக்கு இது மூட்டுவது என்பது, வாங்ச்சேங்கின் நீதி மொழியாகும். வாழ்க்கையை உள்ளடக்கமாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, தொகுப்பாளர்களின் இயல்பான மனித உணர்ச்சி தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கலை வாழ்க்கை என்ற நிகழ்ச்சியில் சுமார் 200 கலைஞர்களை எதிர்நோக்குகின்றேன். நிகழ்ச்சிக்கு தயராகும் போது, அவர்களுக்கு உதவி, அவர்களுடன் நண்பராக பழகினேன். இந்த நிகழ்ச்சி உயர் ரசிகர்கள் விகிதத்தைப் பெற்றதற்கு இது முக்கிய காரணம் என்றார் அவர்.

வாங்ச்சேங், சீனாவில் புகழ்பெற்ற பழைய நகரான சி அன்னில் பிறந்தவர். 1989ம் ஆண்டில் பெய்ஜிங் ஒலிபரப்பு கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவருடைய மதிப்பு எண் எப்பொழுதும் முன்னணியில் இருக்கிறது. 1996ம் ஆண்டில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்துக்கொண்ட பிறகு அவர் மத்திய தொலைகாட்சி நிலையத்தின் கலைப் பிரிவில் சேர்ந்தார். ஒரு ஆண்டுக்கு பிறகு, அவர் தயாரித்த மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள், சீனத் தொலைகாட்சி கலை நட்சத்திரப்பரிசு பெற்றுள்ளன. தலைச்சிறந்த சாதனையினால், 1999ம் ஆண்டில் 28 வயதான வாங்ச்சேங் நிகழ்ச்சியின் தயாரிப்பு மேலாளராக பதவி ஏற்று, மத்திய தொலைக்காட்சி நிலையத்தில் மிகவும் இளமையான தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறினார். 2004ம் ஆண்டின் ஜூலை திங்களில் தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தலைமை ஆணையத்தின் 10 தலைச்சிறந்த இளைஞர்களில் ஒருவராக அவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

2000ம் ஆண்டில், கலை வாழ்க்கை என்ற நிகழ்ச்சி துவக்கத்தில், அவர் முழுமூச்சுடன் வேலை செய்தார். நிகழ்ச்சி குழுவின் தலைவராக, அவர் நாள்தோறும் முதல் ஆனாக அலுவகத்துக்குச் சென்று, கடைசி ஆனாகத் திரும்பினார். இந்தக்குழுவில் ஒவ்வொருவரும் மதிக்கப்பட்டு, பெருமளவில் தமது உள்ளாற்றலை ஆற்ற முடியும். திட்டத்தை வகுப்பதிலும் நிகழ்ச்சி தயாரிப்பிலும், வாங்ச்சேங் தமது திறனை பன்முகங்களிலும் பயன்படுத்தினார். அவருடைய எழுச்சி அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளது.

அவர் மேலும் கூறியதாவது:

இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கிறது. எனது அன்பு மூலம் இந்தக்குழுவில் செல்வாக்கு செலுத்துகிறேன். ஒரு நிகழ்ச்சி வளர்ச்சியடைவதற்கு படிப்பு தேவை. படிப்புமயமாக்கத்துடன், எமது குழு வலுவான உயிராற்றல் கொண்டு, இடைவிடாமல் புதுப்பிக்க முடியும் என்றார் அவர்.

புகழ்பெற்ற நிகழ்ச்சியின் தயாரிப்பு மேலாளராக, தமது நிகழ்ச்சியை தொடர்ந்து புதுப்பித்து, மேலும் கூடுதலான ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என வாங்ச்சேங் விரும்புகிறார். பேட்டியளிக்கும்போது, 2006ம் ஆண்டின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு, சீனாவில் புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஆகியோர் இணைந்து சேர்ந்து, பெரிய பேட்டி நிகழ்ச்சியைத் தயாரித்து, சீனாவின் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு சிறப்பான நிகழ்ச்சியை வழங்க முயற்சி செய்கின்றார்.