கலை......வணக்கம் நேயர்களே. இது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம். கலையரசியும் ராஜாராமும் சேர்ந்து இன்று உங்களை சந்தித்து உங்களுக்கு சமையல் சேவை செய்யப் போகிறார்கள் மகிழ்ச்சிதானே.
ராஜா.....மகிழ்ச்சித் தான். இன்றைக்கு நேயர்களுக்கு என்ன உணவு அறிமுகப்படுத்துறீர்கள்?
கலை.......உங்கள் விருப்பம் என்ன?
ராஜா.......கடந்த ஆண்டின் உணவு அரங்கம் நிகழ்ச்சியில் பல சிற்றுண்டி, வகைகளின் தயாரிப்பு பற்றி சொன்னோம். இன்றைக்கு கொஞ்சம் வித்தியசமாக சொல்லலாமா?
கலை.....கொல்லாலாம் அப்படியிருந்தால் தமிழர்களுக்கு பொதுவாக பிடிக்கும் சிக்கன் சூப் பற்றி கூறலாமா?
ராஜா.......சொல்லுங்கள்.
கலை.......சரி, இந்த சூப் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் சொல்கின்றேன். சிக்கன் கால் கிலோ, வெங்காயம் 100 கிராம், தக்காளி 50 கிராம், சீரகம் 10 கிராம், மல்லித்தூள் 2 தேக்கலந்தி, மஞ்சள் தூள் கால் தேக்கலந்தி, மிளகாய்த் தூள் அரை தேக்கலந்தி, பூண்டு 1, பச்சை மிளகாய் 5, மிளகுத் தூள் 1 தேக்கலந்தி, இஞ்சி 25 கிராம்.
ராஜா.......நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழ் நாட்டு சூப் போல இருக்கின்றதே. அப்படிதானா?
கலை.......ஆமாம். சீன உணவு அரங்கம் என்றாலும் சில சமயங்களில் தமிழரின் பழக்கவழக்கத்தின் படி உணவு தயாரிப்பு பற்றி சொல்லலாம். இல்லையா?அப்போதுதானே தமிழர்களை மகிழ்விக்க முடியும்?
ராஜா......சரிதான். நீங்கள் சொன்ன பொருட்களில் எதையோ மறந்துவிட்டது போல் தெரிகிறது.
கலை.......ஆமாம், கடைக்குப் போய் மல்லித் தழை, கறிவேப்பிலை, கொஞ்சம் எண்ணெய், உப்பு வாங்கிட்டு வாங்க.
ராஜா......உரியாக சொன்னீர்கள். தேவையான எல்லா பல பொருட்களும் இல்லாவிட்டால் சமைப்பது கடினம் இல்லையா?
கலை....... பொறுமையுடன் சமைக்கும் நுட்பத்தை கேளுங்கள். பின் வீட்டில் பயிற்சி செய்யுங்கள். அடுத்த முறை உங்கள் அனுபவத்தை சொன்னால் நீங்கள் உண்மையில் சிக்கன் சூப் தயாரிக்கும் நுட்பத்தை புரிந்து கொண்டதாக சொல்லலாம். சரியா?
ராஜா......சரி. சிக்கன் சூப் தயாரிப்பு செய்முறை சொல்லுங்கள்.
கலை......சொல்கின்றேன், முதலில் வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டுவெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை வாணலியில் போட்டு சிறிது வதக்க வேண்டும். பிறகு பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனையும் உள்ளே போட்டு, வதக்கி 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். சிக்கன் நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி மல்லித் தழை நறுக்கிப் போட்டு மணமான சிக்கன் சூப்பை பரிமாறவும்.
ராஜா.....நீங்கள் ஒரே மூச்சில் செய்முறையை சொன்னீர்கள். என்னால் அவ்வளவு சீக்கிரமாக புரிந்து கொள்ள முடியாது. நான் திரும்பச் சொல்லட்டுமா?
கலை....... சொல்லுங்கள்.
ராஜா....... முதலில் வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிறிது எண்ணஎய் ஊற்றி, சீரகம் போட்டு பொறித்தவுடன் கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை வாணலியில் போட்டு சிறிது வதக்க வேண்டும். பிறகு பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனையும் உள்ளே போட்டு, வதக்கி 1 லிட்டல் தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். சிக்கன் நன்கு வெந்தவுடன் அடுப்பிலி இருந்து இறக்கி மல்லித் தழை நறுக்கிப் போட்டு மணமான சிக்கன் சூப்பை பரிமாறவும்.
கலை.......பரவாயிலையே. முழுமையாக மறுபடியும் சொன்னீர்கள். இந்த திறமையுடன் சமைப்பதில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.
|