• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-24 10:28:09    
தாமரைத் தண்டும் உடல் நலமும்

cri
ராஜா...கலையரசி, சில நாட்களுக்கு முன்னால் இந்திய அமைச்சர் இளங்கோவனை பேட்டி கண்டு விட்டு திரும்பும் போது லோஸெ தீ ஹௌஸ் என்ற உணவு விடுதியில் பகலுணவு சாப்பிட்டோம். உங்களுக்கு நினைவிருக்கா?

கலை....ஆமாம். நன்றாக நினைவிருக்குது.

ராஜா...அப்போது போண்டா போல ஒரு பண்டம் பரிமாறினாங்க. சுவையாக இருந்தது.

கலை....ஆனால் அது போண்டா இல்லை. தாமரைத் தண்டு வடை. உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சீனாவிலே தாமரைக் கிழங்கை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகிறாங்க.

ராஜா....அப்படியா?சுவையாக இருப்பது காரணமா?

கலை....சுவை மட்டுமல்ல தாமரைத் தண்டில் பல வகையான சத்துக்கள் இருக்கின்றன. 66 வகை பழங்கள் மற்றும் காய்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் முதுமை அடைவதைத் தடுக்கும் ஆற்றல் தாமரை தண்டில் அதிகம் என்று மதிப்பிட்டுள்ளனர்.

ராஜா....இதற்கு என்ன காரணம்?

கலை...தாமரை ஏரிநீரில் வளர்வது பூ மேலே மிதக்கும்.

ராஜா...ஆமா. ஒரு பாட்டு கூட இருக்குதே தண்ணீர்ரிலே தாமரைப் பூ தள்ளாடுதே அலைகளிலே என்று கண்ணதாசந் எழுதியிருக்கிறார்.

கலை...ஆமா. பூ மேலே மிதந்தாலும் அதன் தண்டு நீருக்குள்ளே இருக்கின்றது. தாமரைத் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப் பொருட்களும் உள்ளன.

ராஜா...அப்படியானால் நிறைய தாமரைத் தண்டு தின்றால் நீண்டகாலம் வாழலாம் என்று சொல்லுங்க.

கலை....ஆமாம்.பச்சையாகத் தின்னலாம். சமைக்கும் சாப்பிடலாம். நீருக்கடியில் வளர்வதால் இது குளிர்ச்சியானது. தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன மூலிகை மருத்துவம் கூறுகின்றது. மேலும் தாகமும் தணிகிறது. மது குடித்த பின் வாயில் ஏற்படக் கூடிய கசப்பையும் ரத்தவாந்தியையும் தாமரைத் தண்டு கட்டுப்படுத்துகின்றது.

ராஜா...அப்படியானால் குடி மகன்கள் தொட்டுக் கொள்ள ஊறுகாய்க்கு பதிலாக தாமரைத் தண்டு உள்ளே தள்ளலாம்.

கலை...மது குடித்து விட்டு மருந்தாக சாப்பிடாமல் நேரடியாக தாமரைத் தண்டுகளைத் தின்று உடம்பில் சத்து சேர்க்கலாமே. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா? பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது. ஆகவே பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள்.

ராஜா....தாமரைத் தண்டை சமைத்தால் இந்தச் சத்து கெட்டுவிடாதா?

கலை...இல்லை. தாமரைத் தண்டை வேகவைக்கும் போது அதில் உள்ள மாவுப் பொருள் நன்கு வெந்து பக்குவமாகிறது. ஆகவே எளிதில் ஜீரணமாகிறது. இதை குழந்தைகளுக்கும் வயதான முதியவர்களும் கொடுப்பதால் ஆபத்து இல்லை.

ராஜா...சரி. இதை எப்படி சமைப்பது?

கலை....என்ன உணவு அரங்கம் வாசனை வீசுதா?

ராஜா...இல்லை. ஒரு சிறிய சமையல் குறிப்பு சொல்லுங்க.

கலை...சரி. சொல்றேன். பச்சைத் தாமரைத் தண்டை சுத்தம் செய்து தோல் உரித்து சிறிசிறு தண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு அதில் வினிகரும் சீனியும் கலந்து சில நிமிடங்கள் ஊற வையுங்கள். புளிப்பும் இனிப்பும் கலந்த தாமரைத் தண்டு சிற்றுண்டி தயார்.

ராஜா...வினிகர் இல்லாவிட்டால் புளிக் கரைசல் அல்லது எலுமிச்சம் பழச் சாறு பயன்படுத்தலாமா?

கலை...பயன்படுத்தலாம். புளிப்புச் சுவை வேண்டும். அவ்வளவுதான்.

ராஜா...இது பச்சையாகத் தின்பதற்கு தாமரைத் தண்டை சமைக்கும் முறை சொல்லுங்கள்.

கலை...விடமாட்டீங்க. சரி, சொல்றேன். தாமரைத் தண்டை நன்றாக சுத்தம் செய்த பிறகு அதைக் குடைந்து ஓட்டை போட்டு அதற்குள்ளே ரப்பர் அரிசி அல்லது பசை அரிசியை நன்றாகத் திணித்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சில நிமிடங்கள் ஆற வைத்து பிறகு கத்தியால் சிறுசிறு துண்டுகளாக அதாவது வட்ட வட்ட வில்லைகளாக நறுக்க வேண்டும். அதன் மீது சிறிது சர்க்கரையும் OSMANTHUS மலரும் தூவினால் தாமரைத் தண்டு சோறு தயார். இது தென் சீனாவில் புகழ் பெற்ற சிற்றுண்டி. இன்னொரு முறையும் இருக்கின்றது. தாமரைத் தண்டு துண்டுகளுடன் வெள்ளைப் பூண்டு இஞ்சி மிளகாய் ஆகியவற்றைக் கலந்து எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம்.

ராஜா...ஆகா. அருமையான சமையல் ஆரோக்கியமான சமையல்.

கலை...குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை தின்பது நல்லது . ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது. மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து முதல் மருந்தாக சீன மூலிகை மருத்துவர்கள் தருகின்றனர்.