• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-23 18:28:11    
நாய் பற்றிய நகைச்சுவை செய்திகள்

cri
சீன பஞ்சாங்கத்தின் படி முதலாவது திங்கள் முதல் நாள் அதாவது ஜனவரி 29ம் நாள், சீன மக்களின் வசந்த விழாவாகும். அன்று முதல் சீன மக்களின் நாய் ஆண்டு தொடங்குவதாக கூறப்படுகிறது. அடுத்து, நாய் பற்றிய நகைச்சுவை செய்திகள் இடம்பெறுகின்றன.

மணமகளுக்குத் துணைவியான நாய்

நெதர்லாந்தில் பொன் நிற வேட்டை நாய், சிறப்பு பயிற்சி பெற்றால், அந்த நாட்டவர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியும். அத்துடன் மணமகளின் துணைவியாக இருக்கலாம். திருமண விழாவில் நாய்களுக்கு அழகுபட கழுத்தில் பூமாலை போடப்படுகின்றது. முன்னதாக மணமகனும் மணமகளும் உள்ளூர் நிர்வாக கமிட்டியிடம் அனுமதியைப் பெற வேண்டும்.

நாய் வேதக்கோயில்

"எல்லா நாய்களும் வேதக்கோயிலுக்குள் நுழையலாம்"என்ற வாசகம் அமெரிக்காவிலுள்ள ஒரு வேதக்கோயிலின் வாயிலில் எழுதப்பட்டுள்ளது. அதன் படி முதன்முதலாக இந்தக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்த நாய்களின் எண்ணிக்கை 15 ஆகும். இந்த வேதக்கோயிலானது, ஓவியர் ஸ்ட்வான் காநெக் தாம் செல்லமாக வளர்க்கும் 5 நாய்களுக்காகக் கட்டப்பட்டது. இன்று இது நாய்களுக்கு பிடித்தமான கோயிலாகும்.

நாய்களுக்கு சிறப்பான குளிர் பான வகைகள்

ஆஸ்கிரேரியாவில் நாய்களுக்கு சிறப்பு குளிர் பான வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் சோடா நீர் சேர்ப்பதற்குப் பதிலாக மனப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. கோழியிறைச்சி பன்றியிறைச்சி, மாட்டிறைச்சி, கேக், காய்கறிகள், மக்காச்சோளம் ஆகியவற்றைச் சேர்ந்த மணம் அது. 600 சி.சி கொண்ட ஒரு பாட்டில் பானத்தின் விலை 2 அமெரிக்க டாலர்.

காட்டு நாய் வின் வெளிவீரராகுவான்

1960ம் ஆண்டு ஆக்ஸ்ட் 19ம் நாள் இரண்டு நாய்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட விருந்தது. திடீரென ஒரு நாய் தொலைவிலுள்ள காட்டு நாய் கூட்டம் இருக்கும் திசையை நோக்கி விரைந்து ஓடியது. அதைப்பிடிக்கவே முடியவில்லை. வேறு வழியின்றி அங்குள்ள பணியாளர்கள் காட்டு நாய் கூட்டத்தில் இருந்து ஒரு காட்டு நாயைப் பிடித்துக் கொண்டு விண்வெளிக்கு அனுப்பினர். விண்வெளி கலம் தரை இறங்கிய போது, பயிற்சி பெற்ற நாய், தடுமாறி நடந்து சென்றது. அந்தக் காட்டு நாயோ துணிவுடன் தொலைவிலுள்ள புல் வெளிக்கு ஓடிச்சென்றது.

ரத்தம் ஏற்றிக்கொண்ட நாய்களுக்கு பரிசு

பிரிட்டனில் ஒரு நாய் 200 சி.சி. ரத்த தானம் செய்யுமானால் அதற்கு ஒரு பொட்டலம் தரமிக்க நாய் உணவு கிடைக்கும். அங்கு நாய் ரத்தம் பற்றாக்குறையால் கால்நடை மருத்துவர் இந்த யோசனையை வெளியிட்டார்.