• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-23 22:02:54    
தனியார்களுக்கான சீன வங்கியின் நிதிச் சேவை

cri

பெய்ஜிங்கிலுள்ள ஒரு சுற்றுலா நிலையத்தில் வேலை செய்யும் ச்சியேள வைய், அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கிறவர். முன்பு, உள்நாட்டிலேயே அந்நிய பணத்தை மாற்றுவார், அல்லது ரென்மின்பி பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு போய் அங்கே மாற்றுவார். சீனாவின் தொடர்புடைய விதிகளின் படி, சீனாவில் இருந்து ரொக்கப்பணத்தை எடுத்துச்செல்வதைக் கொண்டு, சுங்கத்துறை கட்டுப்படுத்தியதால், இந்த வழிமுறை வசதியாக இல்லை. ஆகவே, வங்கி மூலம் இந்தப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.

இந்த வகை மக்களின் இந்தத் தேவையை புரிந்துகொண்ட சீனாவின் பெரும்பாலான வங்கிகள், வெளிநாடுகளின் கடன் அட்டை முறையைப் பயன்படுத்தி உதவி செய்யும் ஒரு முறையை தொடங்கியுள்ளது. பல வெளிநாட்டு வங்கிகள் சீனாவில் நுழைந்த பிறகு, சீனாவின் உள்நாட்டு வங்கிகள் சேவை முறையைச் சீர்திருத்தி, சேவை வகைகளை அதிகரித்துள்ளன. வெளிநாட்டு வங்கிகளின் போட்டியைச் சமாளிக்கும் பொருட்டு, சீனாவின் வங்கிகள், வாய்ப்புக்கள் அதிகம் உள்ள தனியார் நாணயச் சந்தையில் நுழையத் துவங்கின. செய்தியாளிடம் பேசிய சீன போக்குவரத்து வங்கியின் பெய்ஜிங் கிளை தனியார் சேவைப் பிரிவின் தலைவர் லீயாங் சுவான், இவ்வங்கியின் இரு வகை கடன் அட்டைகளைப் பெறும் வாடிகையாளர்கள், அவற்றை வெளிநாடுகளில் பயன்படுத்தலாம். அந்நிய பணத்தை மாற்ற வேண்டியதில்லை என்றார். அவர் மேலும் கூறியதாவது

இந்த வகை அட்டை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயன்படுத்தக் கூடியது. வெளிநாட்டில் செய்த செலவுக்கு, சீனாவில், ரென்மின்பி மூலம் திரும்பச் செலுத்தலாம் என்றார் அவர்.

தற்போது, சீனாவின் வங்கிகள், தனியார் சொத்து நிர்வாக சேவையை தொடங்கியிருப்பது, சீன வங்கித் துறையின் வளர்ச்சியில் காணும் நெடுநோக்கு மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

சீனாவில் பெரிய அரசுசார் வணிக வங்கிகள் அல்லது நகர வணிக வங்கிகள், சிறப்பான சொத்து நிர்வாகப் பிரிவை ஏற்படுத்தியுள்ளன. அந்நியப் பணம் மற்றும் நிதி வர்த்தகம் பற்றிய ஆலோசனை சேவையை வழங்குகின்றன.

தனியார் நாணய சேவை தொடர்ந்து வளர்ச்சி அடைவதால், வங்கிகள், பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, தனியார் சொத்து மதிப்பை உறுதிப்படுத்தி வளர்க்கும் வழியாக மாறியுள்ளது. இந்த நிலைமையை மதிப்பிட்ட சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் நாணய மற்றும் பங்கு ஆய்வகத்தின் பேராசிரியர் சேளவு சி சியுன், உலகளவில் வங்கித் துறையின் வளர்ச்சியை பார்த்து, வாங்கியின் வணிகத்தை, பல வகைகளாக மாற்றுவது, பொதுவான வளர்ச்சி போக்கு ஆகும். இத்துடன், வங்கி துறையின் வளர்ச்சியுடன், தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதால் மட்டும், வங்கிகளின் தேவையை நிறைவு செய்ய முடியாது. தற்போது, CITY GROUP, HSBC உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளின் தனியார் நாணய சேவை, அதன் மொத்த சேவையில் 40 விழுக்காடாக உள்ளது. ஆனால், சீன வங்கிகளின் தனியார் நாணய சேவை, 10 விழுக்காடாக மட்டுமே உள்ளது. மாபெரும் சந்தை அளவும் போட்டியும், சீன வங்கிகள் தனியார் நாணய சேவையைத் தொடங்கி வளர்பதற்கு முக்கிய காரணங்களாகும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, சீன மக்களின் சேமிப்பு, 13 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. தனியார் நாணய சேவையின் வளர்ச்சிக்கு, இது, மாபெரும் வாய்ப்பை வழங்கியுள்ளது. வங்கிகள் கூறும் யோசனையைப் பின்பற்றி, வாடிகையாளர்கள், தங்களது சொத்தைக் கையாளுவது, சீன வங்கிகள் வழங்கும் தனியார் சொத்து நிர்வாக சேவையில் முக்கிய அம்சமாகும். இது குறித்து சீன வங்கி தனியார் நாணய பிரிவின் தலைமை இயக்குநர் யே யீ கூறியதாவது:

எதிர்காலத்தில், நாங்கள் நிபுணர்களையும் முதலீட்டு உற்பத்தி பொருட்களையும் பயன்படுத்தி, ஒரு வாடிகையாளருக்கு ஒரு நிபுணர் என்ற தனியார் சொத்து நிர்வாகக் கட்டத்தில் படிப்படியாக நுழைவோம் என்றார் அவர்.

தற்சார்பு மூலம், தனியார் நாணய சேவையைத் தொடங்கியிருப்பதோடு, தமது ஆற்றலை உயர்த்தும் பொருட்டு, சீன வங்கிகள், சர்வதேச நாணய அமைப்புகளின் முன்னேறிய கருத்துக்களையும் அனுபவங்களையும் பின்பற்றி முயல்கின்றன. கடந்த ஆண்டின் ஜுன் திங்களில், சீன கட்டுமான வங்கியும் அமெரிக்க வங்கியும் நெடுநோக்கு முதலீட்டு உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. அப்போது பேசிய சீனக் கட்டுமான வங்கியின் இயக்குநர் கோ சூ சிங், தனியார் நாணய சேவையின் ஆற்றலை வலுப்படுத்துவது, அமெரிக்க வங்கியுடன் ஒத்துழைக்கும் முக்கிய நோக்கம் என்றார். வெளிநாட்டு நெடுநோக்கு முதலீட்டாளர்களை மிகவும் விரைவாக உட்புக்குத்தும் பெரிய சீன அரசு ரக வணிக வங்கியான சீனப் போக்குவரத்து வங்கி, தனியார் நாணய சேவைத்துறையில் பிரிட்டனின் HSBC வங்கியுடன் ஒத்துழைக்கிறது. இது பற்றி, போக்குவரத்து வங்கி பெய்ஜிங் கிளையின் தனியார் சேவைப்பிரிவின் தலைவர் லியாங் சுவான் கூறியதாவது:

போக்குவரத்து வங்கி, HSBC வங்கியுடன் ஒத்துழைக்கும் போது, தனியார் சேவையை முக்கியமாக கொள்ளும் வங்கியாக மாறியுள்ளது. ஒத்துழைப்பு மூலம், தென்கிழக்காசியாவில் ஏன் முழு உலகில் HSBC வங்கியின் தலைசிறந்த வணிக உறுப்புகளையும் கணிணி அமைப்பு முறையையும் பயன்படுத்துவது மட்டுமல்ல, போக்குவரத்தின் உள்நாட்டு வாடிகையாளர் மூலவளத்தைச் சார்ந்து, மேலும் முன்னேறியான விரைவான சேவையை கூட்டாக வழங்கலாம் என்றார் அவர்.

சீன-வெளிநாட்டு வங்கிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பரஸ்பரம் பயன் நலன் தருவதாக கருத்தப்படுகிறது. ஒத்துழைப்பில் சீன வங்கிகள் முன்னேறிய தொழில்நுட்பத்தையும் நிர்வாக அனுபவத்தையும் பெறலாம். வெளிநாட்டு வங்கிகள், ஒத்துழைப்பைப் பயன்படுத்தி, சீனாவில் வளர்ச்சியடையும் அனுப்பவத்தைத் திரட்டலாம். உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது சீனா கொடுத்த வாக்குறுதிக்கிணங்க, 2006ம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டு வங்கிகளுக்கு தனியார் ரென்மின்பி சேவையை திறக்கும். அப்போது, சீன மற்றும் வெளிநாட்டு வங்கிகள் சமநிலைமையில் போட்டியிடும். சீனாவின் நுகர்வோர் இறுதியில் பயனடைவார்கள்.