
கடந்த ஆண்டு சீனாவில் செல்லிடப்பேசி மூலம் 30465 கோடி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. முந்தைய ஆண்டில் இருந்ததை விட இது, சுமார் 40 விழுக்காடு அதிகம் என்று சீனத் தகவல் தொழில் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.குறுந்தகவல் அனுப்புவது என்பது, சீனாவில் செல்லிடப்பேசி பயன்படுத்துவோரின் வழக்கமான பயன்பாடாகும். தற்போது சீனாவில் சுமார் 40 கோடி மக்கள் செல்லிடப்பேசி பயன்படுத்துகின்றனர். பெருமளவில் அவசர தகவல்களை அறிவிப்பதில் செல்லிடப்பேசியின் முக்கியம் மேலும் அதிக அளவில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்சிங், Jiang Xi, கங் சு முதலிய இடங்களில் விபத்து நிகழ்ந்த போது செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
|