வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி.
கடந்த முறை, நாம் ஏற்கனவே படித்துள்ள மூன்று உரையாடல்களை மீண்டும் பார்த்துள்ளோம். எப்படி, உங்களுக்கு புரிந்ததா, கொஞ்சம் பேச முடியுமா? இன்று புதிய பாடத்தைப் படிக்கின்றோம்.
முதலில் மூன்று சொற்களைப் பார்க்கின்றோம்.
இந்த சொற்கள் தமிழ் மூலம் சீனம் என்ற பாடநூலின் 24ஆம் பக்கத்தின் நடுவில் உள்ளன.
முன்னதாக, HAO MA? XING MA? KE YI MA? ஆகிய மூன்று வினா சொற்களைப் படித்துள்ளோம். அவற்றின் பொருள் முடியுமா என்பதாகும். இந்த சொற்களை இன்னொரு மாதிரியாக சொல்லலாம். அதாவது, HAO BU HAO? XING BU XING? KE YI BU KE YI? என்றும் கேட்கலாம். இவை முன்றும் ஒரே பொருள் கொண்டவை. அதாவது முடியுமா இல்லையா என்பது பொருள். அல்லது முடியுமா, முடியாதா என்பது பொரும்.
இங்கு HAO,XING,KEYI ஆகிய மூன்று சொல்லுக்கு முடியும் என்பது பொருள், BU HAO,BU XING,BU KE YI ஆகிய மூன்று சொல்லுக்கு முடியாது என்பது பொருள்.
ஆகவே, HAO,XING,KE YI ஆகிய மூன்று சொற்களுக்குப் பின்னால், முறையே BU HAO,BU XING,BU KE YI ஆகிய மூன்று சொற்களைச் சேர்த்தால், முறையே HAO BU HAO,XING BU XING,KE YI BU KE YI ஆகிய மூன்று வினா சொற்களாக மாறிவிடும். இந்த மூன்று வினா சொற்களுக்கும் ஒரு பொருள் தான், அதாவது முடியுமா இல்லையா, அல்லது முடியுமா முடியாதா என்பதாகும்.
இப்பொழுது ஒரு உரையாடல் பார்க்கின்றோம்.
WO CHU QU YI HUI ER,HAO BU HAO?
BU HAO。
இந்த உரையாடலின் தமிழாக்கத்தை இப்பொழுது தருகின்றோம்.
WO CHU QU YI HUI ER,HAO BU HAO?
நான் சற்று வெளியே போய் வர வேண்டும் முடியுமா, இல்லையா?
BU HAO。
முடியாது.
இன்று நாம் மூன்று புதிய சொற்களையும் ஒரு புதிய உரையாடலையும் படித்துள்ளோம். பாடத்துக்குப் பின் நன்றாக பயிற்சி செயுங்கள். இத்துடன் இன்றைய பாடத்தை முடித்துக்கொண்டு விடைபெறுகின்றோம்.
|