• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-25 20:27:36    
இரண்டு சிறு கதைகள்

cri
1 சுய தண்டனை

பொண்டாட்டிக்கு பயந்துபயந்து வாழும் ஒரு மனிதன் இருந்தான். ஒரு தடவை அவனுடைய பொண்டாட்டிக்கு பயங்கரமான கோபம் வந்துவிட்டது. "இன்னைக்கி இந்த ஆளை உண்டு இல்லைன்னு பண்ணி வேண்டியது தான்" என்று தீர்மானித்தவளாய். தனது கணவனின் விரல்களை இரண்டு குச்சிகளுக்கு நடுவில் வைத்து நசுக்கி தண்டிக்க வேண்டும் என நினைத்தாள்.

"போய் ரெண்டு குச்சி எடுத்துட்டு வாய்யா" என்றாள்.

அவளுடைய மனதில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட கணவன், "ஐயோ, நம்ம வீட்டுல குச்சி இல்லையே" என்றான். "அதனால் என்ன பக்கத்து வீட்டுல இருக்கும். போயி வாங்கிட்டுவா" என்றாள்.

அதற்கு கண்வன் முனங்கிக் கொண்டே போனான்.

அதைக் கேட்டதும் மனைவிக்கு பொறுக்கவில்லை.

"இங்கே வாய்யா. என்ன முனக்கம் கேட்குது?" என்று பொரிந்து தள்ளினாள்.

"ஐயோ, நான் ஒண்ணும் முனங்கலையே" என்று பரிதாபமாக சொன்ன கணவன், "நான் என்ன சொல்றேன்னா, இந்த சித்திரவதை சாமான்களை எல்லாம் நம்ம வீட்டுலேயே வாங்கிப் போடலாம் இல்லியா?" என்றான்.

2 திடீர் புரட்சி

ஒரு ஊரில் வசித்த பொண்டாட்டிக்கு பயந்த கணவர்கள் சிலர் ஒன்று கூடி, தங்களுடைய அதிகாரத்தை எப்படி நிலைநாட்டுவது என்று யோசித்தனர். "வரவர, ஆம்பளைகளுக்கு மதிப்பே இல்லாமல் போச்சி. ஏதாவது பண்ணியாகணும்" என்று திட்டம் தீட்டினார்கள். அவர்களை பயமுறுத்த நினைத்த ஒருவன்,

"யப்பா, கொஞ்சம் உங்க முதுகுல எண்ணெய் தடவிக்கோங்க" என்றான்.

"எதுக்காகச் சொல்றே" என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் ஒரு பொண்டாட்டிக்குப் பயந்த கணவன். "நீங்க கூடிக் கூடிப் பேசுறது உங்க பொண்டாட்டிகளுக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு. எல்லாரும் ஒண்ணு சேர்ந்து வந்துக் கிட்டிருக்காங்க" என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்.

துண்டைக் காணோம் துணியை காணோம் என்று எல்லோரும் தலை தெறிக்க நாலா திசைகளிலும் ஓடி விட்டனர். ஒருவன் மட்டுமே தைரியமாக, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

"அட பரவாய் இல்லையே, இந்த ஊரிலேயும் சுத்தமான ஒரு ஆம்பளை இருக்கானே" என்று ஆச்சரியப்பட்டவனாய் அருகில் போய் பார்த்தான்.

அந்தத் தைரியமான ஆம்பள ஏற்கனவே பயத்தால் செத்துப் போயிருந்தான்.