• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-26 09:46:11    
சாம்பியன் பட்டம் பெற்ற வாங் மன் லி

cri

ஜனவரி 21ஆம் நாள் 2006ஆம் ஆண்டு விரைவுப் பனிச்சறுக்கல் உலகச் சாம்பியன் பட்டப் போட்டி நெதர்லாந்தில் துவங்கியது. அன்று நடைபெற்ற மகளிருக்கான 500 மீட்டர் சறுக்கல் போட்டியில் சீனாவின் புகழ்பெற்ற வீராங்கனை வாங் மன் லீ 38.31 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். சீனாவின் வீராங்கனைகளான ரென் ஹுய் 6வது இடத்தையும் வாங் பெய் சிங் 11வது இடத்தையும் பெற்றனர். பின்னர் நடைபெற்ற மகளிருக்கான ஆயிரம் மீட்டர் பனிச்சறுக்கல் போட்டியில் வாங் மன் லீ ஒரு நிமிடம் 17.72 வினாடி என்ற சாதனையுடன் 6வது இடத்தை பெற்றார்.

இந்த உலக சாம்பியன் பட்டப் போட்டியானது, தூர்லின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முந்திய ஒரு முக்கிய போட்டியாகும். உலகில் தற்போதைய தலைசிறந்த வீரர்களும் வீராங்கனைகளும் இப்போட்டியில் குவிந்திருந்து போட்டியிட்டனர். பத்து நாட்களுக்கு முன் நடைபெற்ற சீனத் தேசிய சாம்பியன் பட்டப் போட்டியில் வாங் மன் லி எதிர்பாராதவாறு காயமடைந்தார். ஆனால் அவர் தனது மிக சிறப்பான விளையாட்டுத் திறனால், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிடுவதில் அதிக வாய்ப்புகளைக் கொண்டவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

21ஆம் நாள் நடைபெற்ற மகளிருக்கான 500 மீட்டர் விரைவுப் பனிச்சறுக்கல் போட்டியில் வாங் மன் லி 7வது பிரிவில் போட்டியிட்டார். ஒரு ஜப்பானிய வீராங்கனையும் அவருடன் ஒரே பிரிவில் இருந்தார். புறப்படும் போது, இருவரும் ஒரே வேகத்தில் சறுக்கினர். ஆனால் அரை வழிக்குப் பிறகு, வாங் மன் லீ வலுவான ஆற்றலையும் திறமைமிக்க தீவிரச் சறுக்கல் திறனையும் வெளிப்படுத்தினார். விரைவில் அவருக்கும் ஜப்பானிய வீராங்கனைக்குமிடையிலான இடைவெளி பெருகியது. இறுதியில் அவர் அறுதி மேம்பாட்டுடன் 500 மீட்டரை சறுக்கி முடித்து, தங்கப் பதக்கம் பெற்றார்.

சீனாவின் வீராங்கனை ரென் ஹுய் 38.630 வினாடி என்ற சாதனையுடன் 6வது இடத்தையும், வாங் பெய் சிங் 38.89 வினாடி என்ற சாதனையுடன் 11வது இடத்தையும் பெற்றனர். முன் நடைபெற்ற பல உலக நிலை போட்டிகளில் வாங் மன் லீயையும் வாங் பெய் சிங்கையும் ஒரே நேரத்தில் தோற்கடித்திருந்த ஒரே ஒரு வெளிநாட்டவரான ஜப்பானின் வீராங்கனை 38.64 வினாடி என்ற சாதனையுடன் 7வது இடத்தை வென்றார்.

ஜப்பானின் மற்றும் இரண்டு வீராங்கனைகள் முறையே 8, 9வது இடங்களில் உள்ளனர். இத்தாலியின் புகழ்பெற்ற வீராங்கனை சிமொங் நாடோ என்பவர் 38.84 வினாடியில் தூரத்தை சறுக்கி முடித்து பத்தாம் இடத்தை பெற்றார். ஜெர்மனியின் வோல்வ் 38.33 வினாடி என்ற சாதனையுடன் 2வது இடத்தையும் ரஷியாவின் துலோவா 38.35 வினாடி என்ற சாதனையுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.