• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-27 21:57:51    
சீனப் பனிச்சறுக்கல் வீராங்கனை வாங் மொங்

cri

இவ்வாண்டு 21வயதான சீன பனிச்சறுக்கல் வீராங்கனை வாங் மொங் உகல பனிச்சறுக்கல் சாம்பியன் போட்டித் தங்கப் பதக்கத்தையும் உலக கோப்பைக்கான போட்டித் தங்கப் பதக்கத்தையும் பல முறை பெற்றிருக்கின்றார். ஆனால் அனுபவமிக்க அவர், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஒரு புதிய போராளியாக திகழ்கின்றார்.

2005ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பைக்கான நான்கு சுற்று 500 மீட்டர் விரைவுப் பனிச்சறுக்கல் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்ற இளம் வீராங்கனை வாங் மொங், தூர்லிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில், சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிடும் மிக அதிக ஆற்றலுடையவர் என போற்றப்படுகின்றார்.

தற்போது வாங் மொங்கிற்கு எந்த காயமும் இல்லை. அவர் ஒலிம்பிக் தங்கத்தை நோக்கி, உறுதியாக முன்னேறிவருகின்றார். ஏற்கனவே தயாராக உள்ள அவர், போட்டி விரைவில் துவங்குவதை எதிர்பார்க்கவே இல்லை. நிதானமான சரிப்படுத்தல் மூலம், நிம்மதியான மனதுடன் தாம் முதல் முறையாக கலந்துகொள்ளும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டை வரவேற்க வேண்டும் என்று அவர் விரும்புகின்றார்.

வாங் மொங்கும், மகளிர் குழுவின் தலைமை பயிற்சியாளரும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக கலந்துகொண்ட போதிலும், வாங் மொங் அனைத்திற்கும் பயப்படாத மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். போட்டி நடைபெறும் போது, பயிற்சியாளரின் பங்கு முக்கியமானது என்ற போதிலும், வாங் மொங் போட்டியில் பயிற்சியாளரை அளவுக்குமீறி சார்ந்திருக்க மாட்டார்.

ஏனென்றால் போட்டி நடைபெறும் போது, தளத்தில் ஒரே சச்சம் உண்டு. பயிற்சியாளர் என்ன சொன்னால் என்பதை தெளிவாக கேட்க முடியாது. இந்த நிலைமையில் விளையாட்டு வீராங்கனையின் மாற்றத்தை சமாளிக்கும் திறன் மிக முக்கியம். வாங் மொங் தனது திறனை சார்ந்திருந்து தளத்தில் தோன்றும் அனைத்து மாற்றங்களையும் அவர் சமாளிப்பார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடர் சறுக்கல் போட்டியின் தங்கப் பதக்கத்தை எட்டு ஆண்டுகளாக பெறவில்லை. எனவே, இந்த தங்கப் பதக்கத்தைப் பெற வாங் மொங் மிகவும் விரும்புகின்றார்.

ஏனென்றால், இந்த தங்கப் பதக்கம் சீன அணியின் ஒட்டுமொத்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் அணி கூட்டிணைந்து போராடும் எழுச்சியையும் இது முழுமையாக பிரதிபலிக்கின்றது. தற்போது சீன அணியினர் தான் மிக வேகமாக சறுக்குகின்றனர். நான்கு பேரும் வலுவான ஆற்றலை கொண்டிருக்கின்றனர். எனவே, சீன அணி இந்த தங்கப் பதக்கத்தை பெறுவதில் வாங் மொங்கிற்கு முழு நம்பிக்கை உண்டு.