• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-25 11:51:50    
வலைப்பின்னல் அமைப்பு மூலம் sms தகவல்களை அனுப்புவது

cri
செல்லிட தொலைபேசி வலைப்பின்னல் அமைப்பு மூலம் sms தகவல் கள் அனுப்பப்படுவது, சீன வானொலிமன்றம் காலாண்டிதழ் வெளியிடப்பட்டது ஆகிய வற்றை நேயர் மன்றத்தின் சாதனைகளாகவும் செல்வம் குறிப்பிட்டுள்ளார். பேளுக்குறிச்சி க செந்தில், பெருந்துறை பல்லவி பரமசிவம் என் பாலகுமார் ஆகியோரும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது பற்றி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர். சீன வானொலி மன்றம் நேயர் மன்றத்தின் சாதனைகளை விளக்கி கருத்தரங்கில் பேசிய வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வத்துக்கு நன்றி. சேந்தமங்கலம் எஸ் எம் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் பற்பல நேயர்களின் இடைவிடாத முயற்சியுடன் நடந்த இந்தக் கருத்தரங்கில் 145 நேயர்கள் பங்கு பெற்றதாகவார். முன்னாள் நிபுணர் முனைவர் கடிகாச்சலம் பங்கேற்று சிறப்புரை ஆற்றியதாகவும் அறிய மிக மகிழ்ச்சி. இதே உணர்வு குறையாமல் தொடர்ந்து பல கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என விரும்புகிறோம். அனைவருக்கும் சீன வானொலி தமிழ்ப் பரிசு பணியாளர்கள் மற்றும் சீனத்தமிழர்கள் சார்பாக நன்றி, நன்றி. பாண்டிச் சேரி என் பாலகுமார் தமது மின்னஞ்சலில் சீனக் கதையில் வரும் மாத்திரங்களுக்கு தமிழ்ப்பெயர்கள் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார். மேலும் சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி இன்பத்தைக் குறைத்தது போல உள்ளது. ஏதோ எழுதுவதைப் படிப்பது போல மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல உள்ளது. உளர்ச்சி இல்லை என்று மலர்ச்சோலையில் சீனாவில் நடைபெற்ற எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லையே என்று கேட்கிறார். சீனக் கதைக்கு சீனப் பெயர்கள் இருப்பதே சரி, அப்புறம் இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் தமிழ் நாட்டில் இருந்து எப்படி சீனாவுக்கு வந்தது என்று செல்வம் கேட்பார் லுஷூன் கதைகளில் அவர் வைத்த பெயர்கள் தான் மாற்றப்படவில்லை. ஒரே ஒரு துப்பறியும் கதையில் மட்டும் விளாண்டி, பிரெளனி என்று கூந்தலின் நிறத்தை வைத்து மேலை நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பெயர் வைக்கப்பட்டதால் அதை தமிழர்களாக மாற்றி வெள்ளைடாமி, கருப்பாயி என்று பெயரிட்டேன் சரிதானே பண்ருட்டியில் இருந்து மொ கணேசன் புதிய cri ஸ்டிக்கர் நன்றாக இருப்பதா கூறுகிறார். மேலும் சீனத் தமிழ் ஒலிபரப்பின் தாய் சாரதா அம்மையாரை நினைவுப்படுத்தி அவர் பேட்டியை நட்புபாலம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பியதற்கு நன்றி தெரிவிக்கிறார். சீனத் தமிழொலி இதழில் ஆரம்பம் முதல் இன்று வரை பணியாற்றிய அனைத்து பணியாளர்கள் மற்றும் நிபுணர்களின் படங்களை வெளியிமோறு பேளுக்குறிச்சி க செந்தில் கோருகிறார்.