
சோச்சுவாங் நகரம்
பயணிகள், படகில் ஏறி சோச்சுவாங் நகரைச் சுற்றிப் பார்க்கலாம். வழியில் அவ்வப்போது, பாலத்திறப்புகளுக்கு ஊடாகச் செல்லுவது மகிழ்ச்சிகரமானது. படகு, ஒரு பாலத்திறப்புக்கு ஊடாகச் செல்லும் போது, ஒரு காட்சி தோன்றும். ஓர் அலைவாய்க் கரையைச் சென்று அடையும் போது ஓர் உணர்வு ஏற்படும்.

சோச்சுவாங் நகரம்
சோச்சுவாங் நகரின் வேறுபட்ட இடங்களில் வெவ்வேறான காட்சிகள் காணப்படுகின்றன. பயணிகள் எழில் மிக்க காட்சிகளைக் கண்டுகளிப்பது தவிர, சுவையான உணவுகளையும் உண்ணலாம். இந்நகரில் சிற்றுண்டியும் புகழ்பெற்றது.

சோச்சுவாங் நகரம்
எடுத்துக் காட்டாக, சுன் சைய் என்னும் ஒரு வகை நீர்க் காய்கறியை வைத்து சூப் தயாரித்தால் ருசியாக இருக்கும். நேயர்களே!நீங்கள் இது பற்றி கேட்டதும் இங்கு வருகை தர விரும்புகிறீர்களா?விரும்பினால் வாருங்கள். படகுச் சவாரி மூலம் இந்நகரைச் சுற்றிப்பார்க்கக் கட்டணம், ஒருவருக்கு 80 ரென்மின்பி யுவான் மட்டுமே.
|